புழல் சிறையில் ஆசிரியர் வேலை ஜூன் 10க்குள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர்,புழல் மத்திய சிறை - 2ல் ஆண் செவிலியர் உதவியாளர், லாரி ஓட்டுனர், துப்புரவு பணியாளர், நாவிதர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நாவிதர் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். லாரி ஓட்டுனர் பணிக்கு கனரக ஓட்டுனர் உரிமத்துடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் பயிற்சியுடன் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சிறை கண்காணிப்பாளர் புழல் மத்திய சிறை - 2 (விசாரணை) புழல் சென்னை - 600 066 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த தகவலை சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.