துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு: 1.67 லட்சம் பேர் எழுதினர்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
https://1.bp.blogspot.com/-ncp_ZpLpQNY/XHxtl7dLE-I/AAAAAAAARn0/ARWL3a4IWwEJstr_lokb-bleA_hGAV_hACLcBGAs/s320/mcms-64.jpg

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியில் அடங்கிய 181 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வை சுமார் 1.67 லட்சம் பேர் எழுதினர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர்- 27 இடம், போலீஸ் டிஎஸ்பி-90, வணிகவரித்துறை உதவி ஆணையர்- 18, கூட்டுறவு சங்க துணை பதிவாளர்-13, மாவட்ட பதிவாளர்- 7, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்-15 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி- 8, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர்- 3 என 181 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தது.    இத்தேர்வுக்கு 2 லட்சத்து  30 ஆயிரத்து 588 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1150 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.    மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 1,21,887 பேரும், பெண்கள் 1,07,540 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேரும் அடங்குவர்.   இந்த நிலையில் குரூப் 1 பதவிக்கான முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 773 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.   சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி என 156 இடங்களில் தேர்வுகள் நடைபெற்றது.    காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணிவரை நடந்தது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.    தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு நடைமுறைகள் வீடியோ மூலம் பதிவு ெசய்ய செய்யப்பட்டது   .பதட்டமான தேர்வு மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு  நடவடிக்கைகளை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பார்வையிட்டனர்.   அது மட்டுமல்லாமல் தேர்வு முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஸ்சி அதிகாரிகள் பல்வேறு மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.  தேர்வு எளிது   தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தவர்கள் கூறுகையில், குரூப் 1 முதல்நிலை தேர்வு எளிதாக இருந்தது. அறிவியல் பாடத்தில் அதிக அளவில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.    நடப்பு நிகழ்வு கேள்விகளும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் கூறினர். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.   அதில், தேர்ச்சி பெறுவோர் நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும்.   துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பணிக்கு தேர்வு செய்யப்படுவோர், 7 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  27% பேர் ஆப்சென்ட்   குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு மொத்தம் 2,29,438 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதில் 73 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதியுள்ளனர்.    அதாவது, 1 லட்சத்து 67 ஆயிரத்து 490 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 27 சதவீதம் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.    அதாவது, 61,948 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments