இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் - அரசாணையின்படி வழங்க கோரிக்கை!

கடந்த 2012 ஆம் வருடம் 16000 க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர் அவர்களில் சுமார் 200 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு கடந்த 2008 ஆம் வருடம் அரசாணை எண் 151 யை பிறபித்துள்ளது.
அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடுகிறது ஆனால் அந்த அரசாணையை தமிழக அரசு நடைமுறைபடுத்தாமல் அந்த அரசு ஆணையை முடக்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையை பறித்து வருகிறது இது புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ன் படி குற்றமாகும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் சட்டத்தை மிதித்து நடக்கின்றனர் உடனே தமிழக அரசு அரசு ஆணை எண் 151 யை நடைமுறைபடுத்தி மாற்றுத்திறனாளிகளை வாழவைக்க முன்வர வேண்டும் இது பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கனிவான கோரிக்கையாகும்