Title of the document
 Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.   இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக் காட்டுகிறது.   இந்த அறிக்கையை CMIE அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் தான் இந்த அறிக்கையை எழுதி இருக்கிறாராம்.   இந்த அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2018 செப்டம்பர் - டிசம்பர் காலத்தில் படித்த பட்டாதாரிகளுக்கான வேலையில்லா திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.  2017 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் இந்த வேலை வாய்ப்பு 12.1% ஆக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.   வேலை இல்லையே போதுமான வேலை இல்லை இப்படி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதைப் பார்த்தால் இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது எனச் சொல்கிறார்.   அந்த 5 பிரிவுகள் ஐந்து பிரிவுகள்   இந்தியாவில் படிக்காதவர்கள், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள், 10-வது அல்லது 12-வது படித்தவர்கள், பட்டதாரிகள் என ஐந்து பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.   கல்லூரிக்கு சென்றவர்கள் பட்டதாரிகள்  இந்த ஐந்து பிரிவில் அதிகமாக வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவது பட்டதாரிகள் தானாம்.   பட்டதாரிகளுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2018 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் வேலையில்லா திண்டாட்டம் 6.7% ஆக அதிகரித்திருக்கிறது.   ஆக இந்தியாவின் ஒட்டு மொத்த சராசரியை விட இரண்டு மடங்கு படித்த பட்டதாரிகளுக்கு தான் வேலை இல்லை.  பெண்கள் நிலை   பட்டதாரி பெண்கள் இந்தியாவில் படித்த பட்டதாரி பெண்களின் வேலை வாய்ப்புகள் ஆண்களை விட மோசம். படித்த பட்டதாரி ஆண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 10%-ஆகத் தான் இருக்கிறது.   ஆனால் படித்த பட்டதாரி பெண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 35% ஆக இருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post