குஜராத் ஆசிரியைக்கு உலக ஆசிரியர் விருது


உலக ஆசிரியர் விருது பெறுவோருக்கான 10 பேர் கொண்ட பட்டியலில் குஜராத் ஆசிரியை ஸ்வரூப் ராவல் இடம் பெற்றுள்ளார்.


 ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் உலக ஆசிரியர் விருது, கல்வித்துறையில் மாணவர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பயனளிக்கும் விதமாக சேவையாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு இந்த விருதுக்காக 179 நாடுகளை சேர்ந்த ஆயிரம் பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.


 இவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஆசிரியை ஸ்வரூப் ராவல் பெயர் இடம்ெபற்றுள்ளது.


 அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் உலக கல்வி மற்றும் திறன் அமைப்பு விழாவில் உலக ஆசிரியர் விருது வழங்கப்படும்.


 விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்வரூப் ராவல், முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.


இவரது கணவர் பரேஷ் ராவல், நடிகராவர். ஸ்வரூப் குஜராத்தில் உள்ள லாவத் ஆரம்ப பள்ளியில் வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்