இப்படி செய்தால் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
தனிநபரின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.6.5 லட்சம் வரை உள்ளவர்களும் வருமான வரிவிலக்கு பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.


மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பொருளாதாரத்தில் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றைச்சாளர முறை கடைபிடிக்கப்படும். 2030 இந்தியா என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். வீடுகளற்ற, நாடோடி மக்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்காக தனிவாரியம் அமைக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வித் திட்டத்திற்கு ரூ.38,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதம் ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அரசின் பங்குகளை ரூ.8 லட்சம் கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேர் பயன்பெறுவர். இதுதவிர தனிநபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நிரந்தர கழிவு வழங்கப்படும்.

ரூ.6.5 லட்சம் வரை மொத்த வருவாய் உள்ளவர்கள், வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் உள்ளிட்ட வரிசேமிப்பு திட்டங்களில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்திருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.

டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை. வாடகை வருவாய் வரிப்பிடித்த உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments