Title of the document
2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன.
தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டுதலை யுஜிசி நடைமுறைப்படுத்தியது.
இதனால் குறிப்பிட்ட "நாக்' தரப் புள்ளிகளைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி, 2018-2019-ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது.
இதுபோன்று, 2019-2020 கல்வியாண்டில் நாடு முழுவதும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற அறிவிப்பை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டில் தகுதி பெற்றிருந்த அந்த 5 தமிழக பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டிலும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன.
அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும், அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 73 படிப்புகளையும், தமிழ் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட 16 படிப்புகளையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல்தொடர்பு, பிபிஏ, எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5 படிப்புகளையும் வழங்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post