Title of the document


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 19 ‘சிறப்பு அதிகாரி-ஐ.டி.’ பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (IT)
1. Oracle Database Administration - 05
2. Base 24 Switch Coding/ Testing/ Management - 03
3. System Administrator (Windows) - 05
4. Information/ Cyber Security - 04
5. Digital/ Cyber Forensics - 02
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 23 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRP201617ITSpecilaistOfficerRecruitmentNotification.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post