Title of the document

போட்டிகள் நிறைந்த இன்றைய நவீன உலகில், மாணவர்கள் பலவித திறன்களை வளர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் கல்வியின் மூலமாக மேம்படுத்தப்படுகிறது. அந்த கல்வியை சிறப்பாகவும், எளிமையாகவும் மாற்றி, அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

ஒரு மாணவனின் கற்கும் திறனை ஒரு ஆசிரியரால் மட்டுமே புரிந்து கொள்ளவும், அதை அதிகப்படுத்தவும் முடியும். சராசரி மாணவனை கூட ஆசிரியரால் திறமை மிக்க மாணவராக மாற்றி காட்ட முடியும். மாணவர்கள் தங்கள் கற்கும் கல்வியை எளிதாக புரிந்து படிக்க ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார் செய்வதற்காக, ஆசிரியர்களும் 'அப்டேட்' ஆக வேண்டியுள்ளது. நமது கல்விதுறையின் எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எளிதாக ஆங்கிலம் பேசும் பயிற்சி, புதிய கற்பித்தல் முறைகள், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு உட்பட பல புதிய யுக்திகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜினியரிங் கல்லுாரியில் கல்விதுறை எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் அரபிந்தோ அமைப்பு மூலம் பயிற்சி ஆசிரியர்களின் 'பீட்பேக்'இதோ....
ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தடுமாறுகின்றனர். அடிப்படையில் ஆங்கிலத்தை பேச, எழுத மாணவர்களுக்கு கற்று தர வேண்டும். அதற்கான பயிற்சி இங்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தை கற்று கொள்ள முடிகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்று விடுவர் என்பதில் இதுபோன்ற பயிற்சிகள் சாத்தியப்படுத்துகிறது. ஆசிரியர்களும் கூடுதல் நேரத்தை ஒதுக்கி, மாணவர்களின் அறிவை திறன்பட கொண்டு செல்ல வேண்டும்.
இளங்கோ, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொய்யாங்குளம்:
பன்முக திறன் அதிகரிக்கும்
இன்றைய கால கட்டத்தில் இதுபோன்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை. அவர்களுடைய பன்முக திறனும் அதிகரிக்கிறது. இது புத்தக அறிவை தாண்டி, மாணவர்களின் தனி திறனும், அனுபவ அறிவும் வளரும். மாணவர்கள் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாமல் கூடுதல் மதிப்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. போட்டிகள் நிறைந்த உலகில், மாணவர்கள் தங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை இதுபோன்ற பயிற்சிகளால், ஆசிரியர்கள், மாணவர்களை தயார் செய்ய முடியும்.
சீனி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சூலக்கரை.
-

மதிப்பு கூட்டும் பயிற்சி

ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பயிற்சியில் பங்கேற்று தங்களை மேம்படுத்தி கொண்டனர். இத்தகைய பயிற்சியால் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த முடிகிறது. புதிய யுக்திகளை கையாளும் போது, மாணவர்களுக்கு வகுப்பறையில் கவனச் சிதறல் ஏற்படாது, எளிதாகவும் புரிந்து கொள்கின்றனர். இத்தகைய பயிற்சிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்துணர்வுடன் கூடிய கல்வியாக அமைகிறது. இத்தகைய பயிற்சியால் ஆசிரியர்கள் செம்மை பெருவதுடன் அவர்களின் மதிப்பும் கூடுகிறது.
சுந்தர விக்னேஷ், பயிற்சியாளர், அரவிந்த் ஆசிரமம், புதுச்சேரி
-

ஆரோக்கிய கல்விக்கு வழி

இதுபோன்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாகவும், புதிய கற்பிக்கும் முறைகளை தெரிந்து
#2965;ொள்ளவும் உதவுகிறது. மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் யுக்திகளை தெரிந்து கொண்டோம். இதுபோன்ற பயிற்சிகள் எங்களுக்கு ஊக்கத்தையும், புத்துணர்ச்சியும் அளிக்கிறது. மாணவர்களுக்கு உற்சாகத்துடன் பாடம் நடத்திய கூடியதான பயிற்சியாக அமைந்தது. மாணவர்களின் ஆரோக்கியமான கல்விக்கு வழி வகுக்கிறது.
சுனந்தா, ஆசிரியை, புளியம்பட்டி தேவாங்கர் நடுநிலை பள்ளி, அருப்புக்கோட்டை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post