Title of the document


கை கழுவுதலின் அவசியத்தை முதன்முதலாக ஒரு மருத்துவர், மற்ற மருத்துவர்களிடம் சொல்லும்போதும் இதே எதிர்ப்பைத்தான் சந்தித்தாராம். கலிலியோவின் கண்டுபிடிப்பை ஏற்காத மதவாதிகள் அவரை சிறையில் அடைத்ததைப் போல, `உங்கள் கைகளைக் கழுவுங்கள்...' என ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூற அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
1847-ம் ஆண்டு குழந்தைப்பேற்றுக்குப் பிறகு, 5 பெண்களில் ஒருவருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் முழுவதும் சீழ்பிடித்து இறந்திருக்கின்றனர். இதைக் கண்ட `இக்னாஸ் செம்மல்வீல்ஸ்' என்ற மகப்பேறு மருத்துவர், பிரசவம் பார்க்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் பிரசவம் பார்க்கும் முன் குளோரின் நீரில் கைகளைக் கழுவுவதன்மூலம் பிரசவக்காலத்துக்குப் பிறகான இறப்பைத் தடுக்கலாம் என்பதை உணர்ந்தார். அதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர் வலியுறுத்த அவரது கருத்துகள் ஏற்கப்படாததுடன் அப்போதைய அரசு, அவரை மனநல காப்பகத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைத்தது. கை கழுவுதலின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்த டாக்டர் இக்னாஸ், சிறையிலும் கிருமித் தொற்றினைத் தடுக்கும் முறைகள் பற்றித் தொடர்ந்து பேசி வந்ததுடன் அதுபற்றிய புத்தகங்களையும் எழுதினார். அவர் செய்த அந்தச் செயல்களுக்குத் தண்டனையாக அவரை அடித்துக் காயப்படுத்தினர். இதனால் அவரது உடல் முழுவதும் கிருமிகள் பரவி, பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பெண்களைப் போலவே, இக்னாஸும் உயிரை இழந்தார்.
கைகழுவுதல்
இதையடுத்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு அதே டாக்டர் இக்னாஸின் ஆய்வை முன்னிறுத்தி ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறைகளைப் பரிந்துரைத்தார். அதேபோல், லூயிஸ் பாஸ்டர் நோய்க் கிருமிகள் ஒழிக்கும் முறையைப் பரிந்துரைத்தார். இவர்கள் இரண்டுபேரும் சொன்னதையடுத்தே கை கழுவுதலின் அவசியம் மருத்துவ உலகத்துக்குப் புரிந்ததாம். அன்றிலிருந்து இன்று வரை, மருத்துவ உலகம் மக்களிடம் கை கழுவுதலின் அவசியத்தை வலியுறுத்தும்போதெல்லாம், இதுபோல சில எதிர்ப்புகளைச் சந்தித்துதான் வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post