தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வெப்பம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவியிருந்தன. எனினும், இன்று வெளியான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை" எனத் தெளிவாக அறிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment