7.5% இட ஒதுக்கீடு – தெளிவான விளக்கம்
7.5% இட ஒதுக்கீடு – தெளிவான விளக்கம்:
விளக்கம் 1:
7.5% இட ஒதுக்கீட்டை பெற, மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழுமையாக அரசுப் பள்ளிகளில் (Tamil Medium/English Medium இரண்டிலும்) கல்வி பெற்றிருக்க வேண்டும்.
விளக்கம் 2:
தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தொடர்ந்து படித்திருந்தால் 7.5% இட ஒதுக்கீடு பொருந்தும்.
விளக்கம் 3:
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பெற்ற மாணவர்களும் 7.5% இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்கள்.
விளக்கம் 4:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்த வகுப்பிலும் (6 முதல் 12 வரை) கல்வி பெற்றிருந்தால், அந்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படாது. 6 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளும் முழுமையாக அரசுப் பள்ளியில் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பதே இச்சலுகைக்கான முக்கியத் தகுதியாகும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment