புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு அறிவிப்பு.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஏற்பளிப்பு குழுவின் ஒப்புதல்களின்படி தமிழ்நாட்டின் 2025-26 - ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 15,00,309 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை ரூ .25.80 கோடி மதிப்பீட்டில் வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட முதற்கட்டத்தின் கீழ் 5.38 இலட்சம் கற்போருக்கு 30191 எழுத்தறிவு மையங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் கடந்த நவம்பர் -2024 மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முதற்கட்ட கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு இணைப்பில் குறிப்பிட்டுள்ள கற்போர் எண்ணிக்கையின்படி 15.06.25 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்த இவ்வியக்ககத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இத்தேர்வை சிறப்பாக நடத்துவதற்கான முன் ஆயத்தப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து முதன்மைக் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : கற்போர் விவரங்கள் -1
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment