Title of the document

தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தடுப்பூசிகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது மீண்டும் சில நாடுகளில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் புதிய தொற்றுகள் அடையாளம் காணப்படத் தொடங்கியுள்ளன.

சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

அண்மைக்காலமாக சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கு போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹாங்காங்கில் மட்டும் ஒரு வாரத்துக்குள் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது சோகமளிக்கிறது.

சிங்கப்பூரில், மே மாதம் மட்டும் 14,200 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது முந்தைய மாதங்களைவிட 28% அதிகம் என்பதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலைமை

இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவாக பார்ப்போம்:

  • தமிழ்நாடு – 18 பேர்

  • புதுச்சேரி – 13 பேர்

  • கேரளா – 15 பேர்

  • கர்நாடகா – 4 பேர்

  • மகாராஷ்டிரா – 7 பேர்

  • டெல்லி – 1 பேர்

எனினும், மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தற்போது 24 பேர் மட்டுமே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலைமை மற்றும் சுகாதாரத்துறையின் பதில்

தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

  • இது "வீரியமற்ற" வகை கொரோனா; மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

  • தினசரி 8 முதல் 10 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.

  • தற்போது பரவல் பெருமளவில் இல்லை, என்றாலும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மக்களுக்கு முக்கிய அறிவுரை

முன்னெச்சரிக்கையாக செயல்படுவது மக்களின் பொறுப்பு:

  • சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்

  • கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியவும்

  • கைகள் அடிக்கடி கழுவவும்

  • ஒட்டுமொத்தத்தில், சுகாதாரத் துறையின் அறிவுரைகளை பின்பற்றுங்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post