Title of the document

 Rain Holiday - கனமழை (11.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !!


 

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும், இது இன்று மேற்கு - வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இதே போல, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு முதல் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post