Title of the document

Local Holiday - டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

தீபத் திருவிழாவையொட்டி, டிச. 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post