School Morning Prayer Activities / பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2024
School Morning Prayer Activities / பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2024 :
- திருக்குறள்
- பழமொழி
- இரண்டொழுக்க பண்புகள்
- பொன்மொழி
- பொது அறிவு
- English words & meanings
- வேளாண்மையும் வாழ்வும்
- நீதிக்கதை
- இன்றைய செய்திகள் - 11.12.2024
- Today's Headlines - 11.12.2024
- திருக்குறள்
- பழமொழி
- இரண்டொழுக்க பண்புகள்
- பொன்மொழி
- பொது அறிவு
- English words & meanings
- வேளாண்மையும் வாழ்வும்
- நீதிக்கதை
- இன்றைய செய்திகள் - 11.12.2024
- Today's Headlines - 11.12.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2024
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம் / Chapter: வெகுளாமை / Restraining Anger
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
பொன்மொழி :
1) நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை.
2)வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே. உன் நிழல்கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.
பழமொழி :
A thief knows thief
பாம்பின் கால் பாம்பறியும்
பொது அறிவு :
கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
விடை : லிக்னோஸ்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
முக்கியச் செய்திகள் : 11.12.2024 - புதன்
மாநிலச்செய்தி:
கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தக் கோரி நம் பாரத பிரதமருக்கு தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
உள்நாட்டுச்செய்தி:
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.
உலகச்செய்தி:
கண்ணாடியை பயன்படுத்தி சூரிய ஒளி: புதுப்புது முயற்சிகளால் பிரமிக்க வைக்கும் சீனா
விளையாட்டுச்செய்தி:
சூப்பர் 100 பாட்மிண்டன்: தனிஷா, அஸ்வினி ஜோடி சாம்பியன்
School Morning Prayer Activities in English Today
Important News: 11.12.2024 - Wednesday
State News:
The Chief Minister of Tamil Nadu has written a letter to the Prime Minister of India, requesting to increase the income limit for educational scholarships to Rs. 8 lakh.
National News:
Former Chief Minister of Karnataka and former Union Minister of External Affairs S.M. Krishna has passed away.
World News:
Sunlight using glass: China amazes with its innovative efforts
Sports News:
Super 100 badminton: Tanisha, Ashwini pair become champions
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.12.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம் : சூது
குறள் எண்:932
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு .
பொருள்:ஒரு பொருள் பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?
பழமொழி :
You may know by a hand full of the whole sack
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இரண்டொழுக்க பண்புகள் :
*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் -- ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
1. வேதியியலின் தந்தை யார்?
விடை: லவாய்ஸியர்
2. மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?
விடை: கருவிழி
English words & meanings :
Thirsty - தாகம்
Tired - களைப்பு
வேளாண்மையும் வாழ்வும் :
சமீபத்திய வருடங்களில் கரிம விவசாயம் மிகப் பெரும் அளவில் வளர்ந்து விட்டது. பாராம்பரிய விவசாயத்தைப் போலவே மிகப் பெரும் அளவில் ஒரு தொழில் முறையை கரிம வேளாண்மை உள்ளடக்கியுள்ளது
டிசம்பர் 11 - சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள் :
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்
பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
பன்னாட்டு மலை நாள் :
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.
நீதிக்கதை :
வீண் பெருமை - அடர்ந்த காடு ஒன்றில் குதிரை :
புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்வதை கண்டது. இருவரும் பேசி பழகின. நண்பர்களாக மாறின.
எலி எப்போதும் தற்பெருமை பேசிக்கொண்டே இருக்கும். "நான் தான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை உருவாக்குவேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாம்பையே நான் விரட்டி விடுவேன்", என்று குதிரையிடம் வீண் பெருமையை கூறியது.
ஒரு நாள் இருவரும் காட்டினுள் சிறிது தூரம் செல்லலாம் என்று முடிவு செய்தன. வழியில் கால்வாய் ஒன்று குறுக்கிட்டது. அதனை பார்த்த எலி "நண்பா! நமது வழியில் ஆறு ஒன்று குறுக்கே செல்கிறது. நாம் எவ்வாறு அதை கடந்து செல்ல முடியும்" என்று குதிரையிடம் கேட்டது.
குதிரையோ,"நண்பா இதை பார்த்தால் உனக்கு ஆறு போல் தெரிகிறதா? இது சிறிய கால்வாய் தான். வா, நாம் எளிதாக கடந்து செல்லலாம்" என்று கூறியது.
எலி, " என்னது இது சிறிய கால்வாயா? நான் இதில் இறங்கினால் மூழ்கி விடுவேன்" என்று கூறியது.
ஆனால், குதிரையோ, "நீ தான் மிகவும் வலிமையானவன் ஆயிற்றே. இந்த சிறிய கால்வாயை கூட உன்னால் தாண்ட முடியாதா தாண்டி செல்லலாம் வா" என்று கூறியது.
அப்போதுதான் எலிக்கு தன்னுடைய பலம் என்ன என்று
புரிந்தது. உடனே குதிரையிடம், "என்னை மன்னித்துவிடு, நண்பா நான் வீண்பெருமை பேசி இவ்வளவு நாள் உன்னை ஏமாற்றி விட்டேன்.என்னை தயவுசெய்து உன் முதுகில் ஏற்றி ஆற்றை கடக்க எனக்கு உதவி செய்"என்று கேட்டது.
குதிரையும் எலியை மன்னித்து கால்வாயை கடக்க உதவி செய்தது.
Post a Comment