Title of the document

பள்ளிக்கல்வித் துறையின் மீது வழக்கு தொடரும் வாய்ப்பினை தவிர்த்திட ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

 மெத்த அவசரம்.



பள்ளிக்கல்வித் துறையின்மீது வழக்கு தொடரும் வாய்ப்பினை தவிர்த்திட வேண்டுகோள்.

AIFETO

நாள் : 01-02-2024

பெறுநர்,

மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள்,தலைமைச் செயலகம்,சென்னை - 600009.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு அறிவித்துள்ள குறிப்பாணையில், பள்ளிக்கல்வி இயக்குநர் இணையவழிக் கூட்டத்தினை 02.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூட்டச் சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் துறைத் தலைவர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் குறிப்பாணையில் அலுவலர்களுடன் திரு.சதீஷ் (சிகரம்) மற்றும் திரு.முத்துகுமார் (Ex.MLA (PTA), நாள் 02-02-2024 அன்று காலை 10.00 மணிக்கு கலந்து கொள்ள வேண்டுமென இடம்பெற்றுள்ளது.

கூட்ட அஜந்தாவிற்கும் திரு.சி.சதீஷ்குமார் இடைநிலை ஆசிரியருக்கும் என்ன தொடர்பு?

திரு. சி.சதீஷ்குமார் 29.10.2004-இல் அறந்தாங்கி ஒன்றியத்தில் வீரராகவபுரம் ஊ.ஒ.து.பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தவர்.தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஊ.ஒ.ந.நி.பள்ளி மேற்பனைக்காடு கிழக்கில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளராக எப்போது நியமனம் செய்யப்பட்டார். அரசு அளித்துள்ள பதவியா ? அந்தப் பதவிக்கு பணி என்ன? ஊதிய நிர்ணயம் உண்டா?

திருச்சி ஆசிரியர் இல்லத்தில் ஓர் அறை அலுவலகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்வதில்லை. கற்பித்தல் பணியிலும் இல்லை. மாதாமாதம் அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் ஊதியத்தினை திரு.சதீஷ் வங்கிக் கணக்கில் சேர்த்து வருகிறார்.

No Work No Pay - விதி என்னானது?

அனைத்து அரசு விழாக்களிலும் திரு. சதீஷ், இடைநிலை ஆசிரியருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்னிலைப்படுத்துவதின் நோக்கம் ? பேரம் பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுத்து வருகிறது.

கொள்கை முடிவு எடுப்பதற்கு பேரம்? சிறப்பாசிரியர்களிடம் பேரம் ?ஆய்வக உதவியாளர்களிடம் பேரம்? நிர்வாக மாறுதல்களில் பேரம்? வேலை வாய்ப்பு நியமனத்தில் பேரம்?

அரசாணை 243 வெளிவந்ததற்கும் இவருக்கும் தொடர்புபடுத்தி நன்றி அறிவிப்பினை பெற்று வருகிறார்.

அரசாணை எண். 243 விதித் திருத்தங்களுக்காக பேரம்? பேரம் பேசுவதற்காகத்தான் திருச்சியில் ஓர் அலுவலகம் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் பட்டியலிட தயார்நிலையில் உள்ளார்கள்.

02-02-2024 அன்று நடைபெற உள்ள காணொலி கூட்டத்தில் திரு.சதீஷ், ஆசிரியர் இடம் பெறுவது தடை செய்யப்பட வேண்டும்.

பள்ளிக்குச் செல்லாமல் ஊதியத்தினை அனுப்பிவரும் அறந்தாங்கி வட்டாரக்கல்வி அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?

தொடர்ந்து திரு.சதீஷ் ஆசிரியருக்கு அரசு விழாக்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுமேயானால் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதை வெளிப்படையாக வெளியிடுகிறோம். பல உண்மைகள் ஆதாரங்களுடன் அடுத்தடுத்து வெளிவரும்.

51 ஆண்டுகால பொது வாழ்வில் மனதால் கூட எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்த மனம் வராதவன். பொருள் திரு. சதீஷ் ஆசிரியரல்ல.

தவறை தைரியமாக செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருவதை சட்டத்தால் உணர வைத்திட முனைகிறோம்.

செய்யச் சொல்பவர்களைவிட உடந்தையாக இருப்பவர்கள்மீதுதான் சட்டம் வலுவான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை உணராதவர்களுக்கும் உணர வைக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் அவசர நடவடிக்கையினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம். விதிகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

வழியே ஏகுவோம்! வழியே மீளுவோம்!!

ஆசிரியர் சமுதாயத்தின் குரல்.

நம்பிக்கை உணர்வுடன்,

வா. அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,தமிழக ஆசிரியர் கூட்டணி,ஆர்வலர் மாளிகை' 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, அஞ்சல் குறியீட்டு எண்-600005, அலைபேசி: 9444212060, மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post