Title of the document
வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது ஏமாற்றம் : ஆசிரியர்கள் கருத்து




மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாதது ஏமாற்றம் அளிக்கிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப் பாண்டியன் கூறியதாவது :

இந்த பட்ஜெட் அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது . நேர்மையாக வரி செலுத்துவோரை கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாததால் ஒரு மாத ஊதியத்தை விட அதிகமாக வரி செலுத்தும் நிலை உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது அரசு ஊழியர்களை கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் குறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறுகையில் , மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அறிவிப்பு இல்லை . வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது . ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தி , துறைமுகங்கள் இணைப்பாக 3 புதிய ரயில் பாதைகள் அமைப்பது வரவேற்கத்தக்கது . இதில் மதுரை - காரைக்குடி - தொண்டி வரை புதிய ரயில் வழித்தடத்தை சேர்க்க வேண்டும் . 40 ஆயிரம் ரயில் பெட்டிகளை வந்தே பாரத் பெட்டிகளாக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

தொழில்வளர்ச்சி குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. புதிய விமான நிலையங்களை ஏற்படுத்துவதில் செட்டிநாட்டையும் சேர்க்க வேண்டும் என்று கூறினார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post