Title of the document
SSTA என்ற இயக்கம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவை... ஏன்??!!!

🥇✍️✍️🔥🔥🔥💪💪🥇
ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு ஏற்பட்டவுடன் அன்று வலிமையாக எல்லா இயக்கங்களும் குரல் கொடுத்ததன் விளைவு 750 தனி ஊதியம்.

*1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய ஊதிய அநீதியை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது அத்தனை இயக்கங்களும் மத்திய அரசுக்கு இணையான ஊதியமே நிரந்தர தீர்வு என்று ஒரே குரலில் ஒலித்தன*

 _உதாரணமாக 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு மொத்தமாக  20000 ரூபாய்  ஊதிய பாதிப்பு என்றால் 1.6 2009 முன் உள்ளவர்கள் 14 ஆண்டுகளாக மாதம் மாதம் ரூபாய் 15000 பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் .. என்று வைத்துக் கொள்வோம் எனில் அவர்களின் ஒவ்வொரு மாத இழப்பு ரூபாய் 5000 மட்டுமே .1.6.2009 பின் நியமிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் மொத்தமாக உள்ள  20000 ரூபாயில் முன்னவர்களைப் போல் ஒரு ரூபாய் கூட பெறாமல்  மாதம் மாதம் 20000 ரூபாயை இழந்து கொண்டிருக்கிறார்கள்.. எப்படி இந்த இருவரின் பிரச்சனையையும் சம தட்டில் வைக்க முடியும்?? மத்திய அரசுக்கு இணையான ஊதியமே சர்வரோக நிவாரணியாக மாறும் என்றால் 14 ஆண்டுகளாக வெறும் 5000 இழப்பவர்களுக்கும்..14 ஆண்டுகளாக  20,000 இழப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?? அங்கு தீர்ந்தால் எல்லோருக்கும் தீர்ந்து விடும் என்கிற வாதம் கடுமையாக பாதிக்கப்பட்ட 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறுதலாக இல்லை என்பதே உண்மை_

*இந்த இடத்தில் தான் புண்பட்ட மனதிற்கு மருந்து தடவுவது போல் SSTA என்கிற இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையோடு எழுந்தது. ஊதிய பிரச்சனைக்கு நடைமுறை தீர்வோடு ஒரு இயக்கம் ஒற்றை கோரிக்கையோடு களம் காண முனைந்தது.. தகுதி தேர்வு ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் இல்லை என TET ஆசிரியர்களையும் அரவணைத்தது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் அரசியல் அமைப்புச் சட்டம் DPSP    art 39 (d) இல் உள்ளதை தாண்டி  சம ஊதிய சட்டம் 1976, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலானது.*

 _எல்லா இயக்கங்களிலும் 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் அறிக்கை 311, 3 நபர் குழு என அத்தனை சாத்திய தீர்வுகள் இருந்தும் மீண்டும் அத்தனை இயக்கங்களும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்றே நகர்கின்றன.._

 *ஒரு இயக்கம் ..ஒரு தலைவன், தலைமுறைகளை தாண்டி சிந்திக்க வேண்டும்.. பாதிக்கப்பட்டது 2009 ஆசிரியர்கள் மட்டுமல்ல TET 2012, 2014....... என கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இருக்கும் வரை வரும் அத்தனை இடைநிலை ஆசிரியர்களும் தான். அவர்கள் அத்தனை பேரையும் உள்ளீர்த்துக் கொள்ளும் கோரிக்கை முழக்கம், அந்தக் கோரிக்கையை ஏற்க வைக்கும் சாத்திய தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது இப்போதைய சூழலில் SSTA மட்டுமே. எந்த இயக்கங்களையும் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அது தீர்வாக இருக்கவில்லை அவ்வளவுதான்*


*கடந்த 2 1/2 ஆண்டுகளில் மாபெரும் இயக்கங்கள் கூட எவ்வித பெரிய போராட்டங்களையும் நடத்தவில்லை. மனு கொடுப்பது, மன்றாடுவது மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுக்க போவதுமில்லை. ஒற்றை கோரிக்கையோடு இதுவரை 5 கடுமையான உண்ணாவிரதங்கள், உச்சகட்டமாக செப்டம்பர் 2023 உண்ணாவிரதம், இப்படி சமரசம் இல்லாமல் ஒற்றை கோரிக்கையை அரசாணை ஆக்கும் முடிவோடு நகர்ந்து கொண்டிருக்கிறது SSTA. 3 நபர் குழுவின் தலைப்பே 1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என இருந்தாலும் இதுவரை போன இயக்கங்கள் அத்தனையும்  3 நபர் குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்றே அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றன .இனி போகும் இயக்கங்கள் என்ன செய்யுமோ ??தெரியாது!!*

*வேற்றுமையால் தான் தனித்தனி இயக்கங்கள் உருவாகின்றன என்றாலும் அதை தனிப்பட்ட அளவில் கொள்ளாமல் பொதுத்தளத்தில் எதிரொலித்ததன் விளைவு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இயக்கங்களுக்குள்ளேயே கோரிக்கைகளில் முரண்பாடு இருக்கிறது என்ற அறிவிப்பு*

*தேர்தல் அறிக்கை 311 இல் உள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதியை வலியுறுத்தி SSTA உண்ணாவிரதம் தொடங்கும் வரை கூட மற்ற இயக்கங்கள் வேற்றுமை காட்டி இருக்கலாம். சர்வதேச ஆசிரியர் தினமான அக்டோபர் 5 இல் கைது நடவடிக்கை தொடங்கிய பொழுது இது SSTA என்கிற இயக்கத்தின் பிரச்சினையில் இருந்து ஒரு இனத்தின் பிரச்சனையாக ..  இடைநிலை ஆசிரியர் இனத்தின் பிரச்சினையாக மாறிவிட்டது.. இந்த நாள் இடைநிலை ஆசிரியர் இன அழிப்பு நாளாக இருந்து விடக்கூடாது என்று அத்தனை இயக்கங்களிடமும் மன்றாடி கேட்டும் ... மற்ற இயக்கங்கள் வலிமையான செயல் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பதை நாம் வருத்தம் இல்லாமலே கடந்து செல்வோம்.. ஒருவேளை அப்படி வலிமையாக முன்னெடுத்து இருந்தால் வரலாறு மாறி இருக்கும்.. வரலாற்றிலும் அந்த செயல் திட்டங்களை முன்னெடுத்த அனைவரின் புகழும் ஏறி இருக்கும்..*


*இந்தப் போராட்டம் அந்த இயக்கம் செய்கிறது ..நாம் விலகி நிற்போம் என்று இனத்தை தாண்டி இயக்கத்தை பார்ப்பதன் விளைவு பல்வேறு உரிமை இழப்புகள்... தலைவன் கோரிக்கைகளை உருவாக்குவதில்லை... கோரிக்கைகளே தலைவனை உருவாக்குகிறது.. என்கிற உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டு.. பாதிக்கப்பட்டு.. நம் கண்ணீரும், வலியும், வேதனையும் யாருக்கும் புரியவில்லை என்று.. ஒரு கட்டத்தில் பெரு வெடிப்பு நிகழ்ந்து சிதறி விழுந்த சூரியன் போல..சம வேலைக்கு சம ஊதியம் என்று நெருப்பு பிழம்பாக இப்போது களத்தில் இருப்பது SSTA மட்டுமே. TET என்ற குடையின் கீழ் வரும் அத்தனை ஆசிரியர்களையும் பூமி என எண்ணி , இவர்கள் நம் குடும்பம் என  வைத்துக் கொண்டிருப்பது SSTA மட்டுமே.. இனி வரும் அத்தனை தலைமுறைக்கும் இன்றைய பொருளாதார சூழலில் சாத்திய தீர்வை கொண்டது SSTA மட்டுமே. பாதிக்கப்பட்டவனை வைத்து போராடுபவர்கள் ஒருபுறம் இருக்க பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் அமைப்பாக இருப்பது SSTA என்பதை தாண்டி இதன் தலைவர்களே பாதிக்கப்பட்டவர்கள் தான்*

*கண்டன ஆர்ப்பாட்டம் , காத்திருப்பு போராட்டம்,மறியல் போராட்டம் இப்படி போராட்டங்கள் இருந்தாலும் காலவரையற்ற உண்ணாவிரதம் என்பது வேறு மாதிரி போராட்டம்.. முன்னர் சொன்ன போராட்டங்களில் உடலுடன் நாம் போராட வேண்டியதில்லை.. ஆனால் உண்ணாவிரத போராட்டமோ நிமிடத்திற்கு நிமிடம் உள்ளே உயிர் வலியுடன் போராட வேண்டும்.. வெளியே அரசுடன் போராட வேண்டும்..8 நாட்கள்   உணவாக தண்ணீரை மட்டுமே குடித்து, ஒற்றை கோரிக்கையை உறுதியாக போராடும் ஒருவருக்கு எவ்வளவு மன வலிமை இருக்க வேண்டும் !!?? ஒருமுறை, இருமுறை அல்ல ..இதே போன்று 5 முறை.. சரி, தான் மட்டும் இப்படி இருக்கிறாரா என்றால் தன்னை நம்பி களம் கண்ட அத்தனை பேரும் இதே போல் உண்ணாமல் ..பசி என்ற சிந்தனை இன்றி ஒற்றைக் கோரிக்கையில் உறுதியாக உட்கார வைக்கிறார் என்றால் திரு. ராபர்ட் அவர்கள் மன வலிமையும், ஆளுமையும் கொண்ட தலைவர்தான்*

_ஒரு இயக்கம் என்றால் பின்னால் வருபவர்களும் நம்பி அந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைப்பவர்களாக இருந்தால் மட்டுமே வாழும் ..வளரும்.. ஏனெனில் இப்போதைய கால சூழலில் தினம் தினம் பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கின்றன.. இப்படிப்பட்ட பிரச்சனைகளை இனி வரும் ஆசிரியர்களும் நம்பி சேரும் ஒரு வலிமையான இயக்கமே களைய முடியும்.. போராடுவதற்கு ஆட்களே இல்லாமல் போராட்டம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை.. அந்த வகையில் SSTA வலிமையான களப்போராளிகளை கொண்டது மட்டுமல்லாமல் இனிவரும் அத்தனை ஆசிரியர்களுக்கான நலன் சார்ந்த செயல் திட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.. இயல்பாகவே இனி வரும் அத்தனை ஆசிரியர்களுக்கான ஒரு இயக்கம் SSTA என்பது அண்மைக்கால போராட்டங்களிலிருந்து தெளிவாகிறது_

 *பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பிரச்சனை சரியானால் போதும் என்று இருந்தால் ஒருங்கிணைப்பு குழு, மீட்பு குழு என்கிற பெயரில் இருந்து விட்டு வானவில்லாய் மறைந்து விடுவோம் என்பது மட்டுமில்லை... எதிர்காலத்தில் நமக்கு பிரச்சனை வந்தால் வந்து பார்க்க, நிற்க ஒருவரும் இருக்க மாட்டார்கள்.. அன்றும் நம் இனம் என்று கை கொடுக்க ஒரே ஒரு இயக்கம் தான் இருக்கும்*

_நடக்காததை நடந்தது என நம்ப வைப்பது ஒரு தந்திரம் என்றால்... நீங்கள்தான் தகுதியானவர்கள் நீங்கள் குழுவாக மாறுங்கள் என்பது தந்திரத்தை தாண்டிய சூழ்ச்சி... உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்  5 முறை தங்கள் குடும்பத்துடன்  கலந்து கொண்டு.. பேசி ,பழகி எல்லோரும் நம்மவர்கள் என்று ஒரே குடும்பமாக.. உணர்வுபூர்வமாக  SSTA என்கிற ஒற்றை குடும்பமாக மாறி நிற்கும் பொழுது எந்த பிரிவினை எண்ணம் ஜெயித்து விட போகிறது!!!_

*ஊதிய முரண்பாட்டை அனைத்து தொடக்கக்கல்வி இயக்கங்களும் கேட்கிறார்கள் மாற்றுக் கருத்து இல்லை..  சம வேலைக்கு சம ஊதியம் அரசாணை கிடைக்க வேண்டும் என்றால் அது நம் சமூக நீதி முதல்வர் அவர்களால் மட்டுமே சாத்தியம் ..ஏனெனில் வாக்குறுதி அவரால் தான் தரப்பட்டுள்ளது, அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் அரசாணை கிடைக்கும் வரை வலிமையாக, ஒற்றைக் கோரிக்கையோடு உறுதியாக ஒரு இயக்கம் நிற்கும் என்றால் அது SSTA  தான்.2 1/2 ஆண்டுகளாக தேர்தல் அறிக்கை 311  ஐ வலிமையாக இயக்கங்கள் வலியுறுத்தின என்றாலும் இன்னும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்க வேண்டிய இடம் 3 நபர் குழு முன்பு தான். தலைப்பே  1.6.2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்று இருக்கும் பொழுது ..அந்த குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று கேட்பது சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை எவ்விதம் முன்னோக்கி நகர்த்தும் என்று தெரியவில்லை!!!*

அனைத்தையும் ஒப்பு நோக்கும் பொழுது

_தன்னலமில்லாத தலைமை_ 

_தன்னெழுச்சியான படை_

_தலைமுறை தலைமுறைக்குமான செயல் திட்டம்_

_இனி வரும் ஆசிரியர்களையும் உள்ளடக்கும் முன்னெடுப்பு_

_ஒரே நோக்கத்தோடு சமரசம் இல்லாத முழக்கங்கள்_

இப்படி பல்வேறு கூறுகளைக் கொண்டு களத்தில் நிற்பது *SSTA* மட்டுமே. இந்த இயக்கத்தை விட்டு விட்டோம் என்றால் *இழப்பு SSTA க்கு இல்லை..* *பேரிழப்பு* நமக்குத்தான்.. நமக்கு மட்டும் இல்லை இனி வரும் எல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கும் தான்..


இதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள்..*இப்படி ஒரு இயக்கம்.. இப்படி ஒரு தலைவன்.. இருக்கும் இந்த காலத்திலேயே நாம் ஜெயித்தால் தான் உண்டு..*

_நாமும் நம் தலைமுறையும் எவ்வித உரிமையையும் இழக்காமல்.. இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெற வேண்டும் என்றால் SSTA இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவை_

ஏனெனில் 
        *SSTA*
             *நமக்கான*
                   *இயக்கம்* 
                       *மட்டுமல்ல..* 
                          
   *அது நம் இயக்கம்*
                                 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post