Local Holiday - அக்டோபர் 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
தேவர் ஜெயந்தி விழா | பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை.!!
Sivagangai Schools and colleges holiday for Devar Jayanti
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குரு பூஜையை முன்னிட்டும், 61 வது பிறந்தநாளை முன்னிட்டும் வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்க உள்ளார்.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30ஆம் தேதி குருபூஜை விழாவாகவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில்
- சிவகங்கை,
- திருப்புவனம்,
- மானாமதுரை,
- இளையான்குடி,
- காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30-ம் தேதி விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment