Local Holiday - நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
Local Holiday,உள்ளூர் விடுமுறை, |
1. கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை :
கன்னியாகுமரியில் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள். இதனைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் குமரி தந்தை என அழைக்கின்றனர். எனவே, இந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில், நவம்பர் 1-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நாமக்கல் உள்ளூர் விடுமுறை :
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கோவில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலின் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு திருவிழா வருகிற அக். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் .
புராண கதைகளின் படி மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். அதனால் ஆண்டு தோறும் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment