அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்வு - ஆசிரியர்கள் கூட்டணி - நன்றி அறிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - நன்றி அறிக்கை :
தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்வு - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நன்றி அறிக்கை
16 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு 42% விழுக்காட்டில் இருந்து 46% விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றி - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - அறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றி அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியிட்டு வழங்கப்படும் என அறிவித்து சொல்வதைத்தான் செய்வேன் , செய்வதைத்தான் சொல்வேன் என்ற தாரகமந்திரத்தோடு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலராக திகழ்ந்தாரோ அதே வடிவில் தான் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார் என்பதன் பறைசாற்றும் விதமாக நிதிலை சரியாக சரியாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றுவேன் என அறிவிப்பின் முன்னோட்டமாக இன்று 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 42% விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 46% விழுக்காடாக ஜூலை மாதம் ஒன்றாம் முன் தேதி இட்டு உயர்த்தி வழங்கி இருக்கின்றார்கள்
சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் என்பதன் எடுத்துக்காட்டாக இன்று16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 46% விழுக்காட்டில் இருந்து 46% விழுக்காடாக உயர்த்தி வழங்கிய ஓய்வரியா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment