Title of the document

"சமவேலைக்கு சம ஊதியம்" ஏன் இந்த போராட்டம்? எதற்காக இந்த போராட்டம்? 

Equal_work_equal_pay_hunger_Strike_why_this_protest

Equal_work_equal_pay_hunger_Strike_why_this_protest

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் SSTA & SSTA -2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு

ஏன் இந்த போராட்டம்? எதற்காக இந்த போராட்டம்?

தமிழகத்தில் 01-06-2009க்குப்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு

"சமவேலைக்கு சம ஊதியம்" வழங்கிடவே இந்த போராட்டம்...!!

மத்திய அரசின் ஊதிய குழுக்களை பின்பற்றி தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் 31.05.2009க்கு முன் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம்:

அடிப்படை ஊதியம்

- 4500

50 % அகவிலைப்படி ஊதியம்

2250

-1620

- 8370

24 % அகவிலைப்படி ஊதியம்

புதிய அடிப்படை ஊதியம்

- 2800

தமிழகத்தில் 01.06.2009க்கு பின் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம்: புதிய அடிப்படை ஊதியம்

- 5200

தர ஊதியம் மொத்தம்

2800

-8000

.11170 8000 = 3170

தர ஊதியம் மொத்தம்

ரூ.11170 அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்ட வேறுபாடு

ரூ3170

அரசாணை எண்: 220 நாள்: 10.11.2008 ன்படி சுமார் 7500 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2008லிருந்து பணிகள் தொடங்கப்பட்டு 01.06.2009ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களது ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணையில் ஊதிய நிர்ணய விகிதம் 4500-125-7000 என குறிப்பிடப்பட்டு உள்ளது. பணி நியமன அழைப்பு கடிதத்தில் உள்ள ஊதியத்தை வழங்கவில்லை.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு லட்சக்கணக்கனோர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) வெற்றி பெற்று 14 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். இலவசக்கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் தகுதியான ஊதியம் வழங்கப்படவில்லை. என

ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழுவில் 36 பிரிவினருக்கும், மூன்று நபர் ஊதியக்குழுவில் 24 பிரிவினருக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர் என்று கூறி ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் தொடர்ந்து ஏதேனும் காரணங்கள் கூறி வழங்க மறுத்து விட்டனர்.

நாம் கேட்பது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்ல. தமிழ்நாட்டில் பணிபுரியக்கூடிய சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம். அதாவது, "ஒரே கல்வித்தகுதி" "ஒரே பதவி" "ஒரே பணி" என அனைத்தும் சமமாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" மட்டுமே.

- இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக மிக குறைந்த கடைநிலை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இது "மத்திய அரசில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகும்."

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான ஊதிய முரண்பாடு களையக்கோரி "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி 2016- பிப்ரவரியில் 6 நாள்கள், 2018- ஏப்ரலில் 4 நாள்கள், 2018- டிசம்பர் மாதத்தில் 6 நாள்கள் என SSTA சார்பாக மிகக்கடுமையான காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.தற்போதைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித்தலைவருமான "மாண்புமிகு.தமிழக முதல்வர்” அவர்கள் போராட்டக்களத்திற்கே நேரில் வருகை புரிந்து ஆதரவு தெரிவித்து நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென அறிக்கை வெளியிட்டார்கள்.

6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் குறைக்கப்பட்ட ரூ3170, 7வது ஊதியக்குழுவிலும் களையப்படவில்லை. அதனால், இன்றைய நிலையில் 12 ஆண்டு ஊதிய உயர்வு (INCREMENT) இழப்பீடு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. இந்திய உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் "ஒரே கல்வித்தகுதி" "ஒரே பதவி" "ஒரே பணி" என அனைத்தும் சமமாக உள்ளவர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதனை பின்பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உளளது. சமூக நீதி காக்கும் "மாண்புமிகு தமிழக முதல்வர்" அவர்கள் தலைமையில் அமைந்து உள்ள தி.மு.க.அரசின் தேர்தல் அறிக்கை:311ல் 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட 20,000 இடைநிலை

ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளார்கள். கொரோனா தொற்றுக்காலத்தில் "மாண்புமிகு தமிழக முதல்வர்" அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று SSTA இயக்கமானது மக்களுக்காக ரூ33,33,333 கொரோனா கால நிவாரண நிதியினை வழங்கியது. மேலும், 20000 இடைநிலை ஆசிரியர்களும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். சமூக நீதி காக்கும் "மாண்புமிகு தமிழக முதல்வர்" அவர்கள் மேடை தோறும் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறி வருகிறார். அதனை விரைந்து நிறைவேற்றிட கடந்த 11.09.2022ல் ஒருநாள் நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனால், அரசிடம் இருந்து பதில் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு 26.12.2022 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. 2023 புத்தாண்டு தினத்தில் "மாண்புமிகு தமிழக முதல்வர்" அவர்கள் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்கிட 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்ற முதல்வர் அறிக்கையினை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களின் வரலாற்றில், இடைநிலை ஆசிரியர்களுக்காக மட்டும் ஊதிய முரண்பாடு களைந்திட அமைக்கப்பட்ட 3 நபர்கள் அடங்கிய குழு இது மட்டுமே. அதன்படி அரசாணை எண்: 25 நாள்: 30.01.2023 ன்படி 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை முடிவு எட்டப்படாமல் கால தாமதம் ஏற்படுகிறது. போராட்ட இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையின் போது விரைந்து முடிவு எட்டப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. நாம் நியமனம் பெற்ற 14 ஆண்டுகளில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேலாக இழந்து உள்ளோம். நம்முடன் நியமனம் பெற்ற பல நூறு ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டனர். இன்னும் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அரசு இன்னும் காலதாமதப்படுத்தக்கூடாது என்பதால் நமது ஒற்றைக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட SSTA இயக்கமாக மூன்று கட்ட போராட்டங்களை நடத்திட தீர்மானித்தோம். அதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் 13 - 2023ல் சென்னை-காமராசர் அரங்கில் கோரிக்கை வென்றிட ஆயத்த மாநாடு- 6500 இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு எழுச்சி உடன் வெற்றிகரமாக நடத்திஉள்ளோம். தற்போது இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 5 முதல் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்துபணிக்கு செல்லும் போராட்டம் நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக - முதல் பருவ விடுமுறையான செப்டம்பர் 28 முதல் DPI-வளாகத்தில்மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட போராட்டங்களுக்கு பாதிக்கப்பட்ட 20000 இடைநிலை ஆசிரியர்களும் ஒருவர் தவறாது பெருந்திரளாய் கலந்து கொண்டு - நமது ஒற்றைக்கோரிக்கையை வென்று எடுப்போம். "சொன்னதை செய்வோம் -செய்வதை சொல்வோம்" என்று கலைஞர் வழி வந்த நமது முதல்வரும் நமக்கு தேர்தல் அறிக்கை - 311ல் இடம் பெற்ற "சம வேலைக்கு"

"சம ஊதியத்தினை நிச்சயமாக வழங்குவார் என்ற நம்பிக்கையோடு களம் காண்போம்.!!

வெற்றி என்பது எளிதல்ல !! அதை விட்டு விடும் எண்ணம் ஒருபோதும் நமக்கல்ல!!

தொட்டு விடும் தூரத்தில் வெற்றியும் உள்ளது!! அதனை எட்டி விடும் தூரத்தில் நாமும் உள்ளோம்!!

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post