ITK - Illam Thedi Kalvi தன்னார்வலர்களுக்கு - முக்கிய அறிவிப்பு !!
தன்னார்வலர்கள் தங்களது ஊக்கத்தொகை வரவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம்.
முதல் கட்டமாக 81 ஆயிரம் தன்னார்வலர்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 82 ஆயிரம் தன்னார்வலர்களின் வங்கிக் கணக்கு சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வந்துவிடும். எனவே யாரும் இன்னும் வரவில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். மிக அதிக எண்ணிக்கையில் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளதால் அதை சரிபார்த்தல் மற்றும் பணம் அனுப்புதலில் தொழில்நுட்ப சிக்கல் உள்ளது.
இதுவரை 11 ஆயிரம் தன்னார்வலர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் மையம் தொடங்கிய தேதி ஆகியவற்றில் தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மீண்டும் unfreeze செய்து அவர்களது மொபைல் செயலியில் அனுப்பி வைக்கப்படும். அதை அவர்கள் சரியான விவரத்தை பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
அடுத்ததாக, அரசில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தன்னார்வலர் ஜனவரி 24 தேதி மையம் தொடங்கினேன் 62 நாட்கள் ஆகி உள்ளன. 1000 ரூபாய் மட்டுமே வந்துள்ளது என்று பதிவு செய்திருந்தார்.
எப்பொழுதும் ஒரு மாதத்திற்கான ஊதியம் அடுத்து மாதத்தில்தான் கிடைக்கும். இடையில் கிடைக்காது. எனவே நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கக்கூடாது. ஒவ்வொரு நிறைவடைந்த மாதத்தில்
20 நாட்கள் பணி செய்திருந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஊக்கத்தொகை வரவில்லை என்று தொடர்ந்து பதிவிட வேண்டாம். எல்லாம் நிறைவு அடைந்த பிறகு உங்களது வங்கி கணக்குகளை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment