Title of the document
✍️📖 *பள்ளிக்கல்வித் துறை - 31-03-2022 மதுரை மண்டல ஆய்வுக் கூட்டத்தின் நிறைவுச் சுருக்கம்.*
🙏
*1. மாணவர்கள் வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.* (LSRW முறைப்படி) 

*முதல் வகுப்பில் வார்த்தைகள் வாசிக்க வேண்டும்.*

*இரண்டாம் வகுப்பில் சிறு சிறு வாக்கியங்கள் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகள் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.*

*மூன்றாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் சரளமாக வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும். மூன்றாம் வகுப்பு முதல் சொல்வதைக் கேட்டு, தமிழும் ஆங்கிலமும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.*

*அடிப்படைக் கணக்குகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.*

*2. தொடக்கநிலை முதல் உயர்நிலை வரை TLM பயன்படுத்தி நடத்த வேண்டும்.*

*அதிகமாக Chart பயன்படுத்துவதை மட்டுமே TLM என கூறக்கூடாது. பெரும்பாலும் Chart -ஐ தாண்டி objects TLM அதிகம் பயன்படுத்த வேண்டும்.*

*3. கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு , remedial teaching அல்லது Coaching அவசியம். அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகவும் முக்கியமானது.*

*4. தொடக்கநிலையில் மாணவர்களிடம், ஆசிரியர்கள் parental அன்புடன் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். மாணவர்கள் அச்சமின்றி ஆசிரியரிடம் கலந்துரையாடி படிக்க வேண்டும்.*

*5. எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எந்த மாணவரும் புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது. மாணவர்களிடம் பாரபட்சமற்ற அணுகுமுறையில் கற்றல் கற்பித்தல் நடைபெறவேண்டும்.*

*6. தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்கானித்து பதிவு செய்ய வேண்டும்.( கண்காணிப்பு பதிவேடு) இது தொடர்பாக உதவி ஆசிரியர்களிடம் நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி சிறந்த கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுக்க வேண்டும்.*

*7. வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டு, பிழைகளை கவனித்து, தேதியுடன் திருத்தப்பட  வேண்டும்.*

*8 - பாடக்குறிப்பேடுகள், கட்டுரை நோட்டுகள் மிக கவனமுடன், தேதியுடன் திருத்தப்பட வேண்டும்.*

*9. எட்டாம் வகுப்பு முடிய அனைவரும் தேர்ச்சி என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள், குறைந்தபட்ச கற்றல் திறனையாவது அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த வகுப்பில் அந்த திறன் நிறைவு செய்யப்பட்ட பின் , அடுத்த வகுப்பு பாடத்தை நடத்த வேண்டும்.(Minimum Learning Level) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.*

*10. பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய கட்டிடம் இருப்பின், அதனை உடனடியாக இடிப்பதற்கு உரிய அலுவலர்களைத் தொடர்பு கொண்டு இடிக்கப்பட வேண்டும்.*

*11. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இணைந்து, அந்தந்தப் பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களையும் , I T K-ல் சேர்த்து படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.*

*எல்லா மாவட்டங்களிலும் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ITK -ல் சேராமல் உள்ளனர். இதில் கவனம் செலுத்தி முழுமையாக சேர்க்க வேண்டும்.*

*மொத்தத்தில் தமிழகத்தில் கல்வி நிலையை, அடுத்த நிலைக்கு உயர்த்த பாடுபட வேண்டும்.*

*இந்த எதிர்பார்ப்புகளுடன்  அலுவலர்கள், பள்ளிகளில் இனி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.* 🙏
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post