Title of the document
*தமிழக பட்ஜெட் 2022-23*

*தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் 2022 -2023 தாக்கல் -  முக்கிய அம்சங்கள்*

💰திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர்.

💰தமிழகத்தின் எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

💰பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

💰பட்ஜெட் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், வெளிநடப்பு செய்தனர்.

💰எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

💰8 ஆண்டுகளுக்கு பிறகு அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது - நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

💰முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 10,01,883 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது - பிடிஆர்

💰தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

💰அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே தமிழக அரசின் இலக்கு.

💰ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

💰தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை

💰அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

💰தமிழர்களின் தொன்மையை பறைசாற்ற கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு

💰கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது

💰தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் அச்சிடப்படும்.

💰பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰அரசு நிலங்களில் நில அளவை பணிகளை எளிதாக மேற்கொள்ள நடவடிக்கை

💰நவீன முறையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரங்கள்

💰வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.7,400 கோடி ஒதுக்கீடு

💰பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

💰சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰நீர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரூ.3384 கோடி மதிப்பீட்டில் பாசன அமைப்பு

💰அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.

💰கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு

💰சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

💰இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰சுற்று சூழல் துறைக்கு ரூ.849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

💰நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

💰தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

💰புதிதாக உருவான 6 மாவட்டங்களில் புதிய மாவட்ட நூலகங்கள் அமைக்கப்படும்.
💰அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.
💰செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத அரசு ஆதரவு அளிக்கும். 150 நாடுகளை சேர்ந்த 2,000 முன்னணி செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

💰19 மாவட்டங்களில் ரூ.1,019 கோடி மதிப்பில் தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

💰பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் 7,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர்

💰உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்வியை தொடர நடவடிக்கை, அந்த மாணவர்களின் கனவை நனவாக்க அரசு உதவும்.

💰தமிழக மருத்துவத் துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு

💰ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542 கோடி ஒதுக்கீடு

💰அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

💰பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

💰தொன்மையான வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு

💰சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு

💰மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.738 கோடி நிதி ஒதுக்கீடு

💰எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,949 கோடி ஒதுக்கீடு

💰பராமரிப்பில்லாத சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்

💰அம்ரூத் திட்டத்திற்கு ரூ.2,130 கோடி நிதி ஒதுக்கீடு

💰நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு

💰முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு

💰சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

💰மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு

💰சென்னை காட்டுப்பாக்கம் சந்திப்பில் நெரிசலை ரூ.322 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை

💰கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலை குறைக்க 6 வழிச்சாலையாக அகப்படுத்த முடிவு

💰துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.

💰மாணவர்களுக்கான பேருந்து பயண கட்டண சலுகைக்கு ரூ.928 கோடி நிதி ஒதுக்கீடு

💰மின்வாரிய இழப்பை சமாளிக்க ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு...👍
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post