Teachers Transfer 2022 - ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கலந்தாய்வு தேதி மாற்றம் - புதிய கால அட்டவணை வெளியீடு !
2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூன்றாவது முறையாக மாற்றப்பட்ட திருத்திய அட்டவணை
🚀 29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
🚀 1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
🚀 1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
🚀 5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
🚀 5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 8.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
🚀 14.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
🚀 16.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
🚀 17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
🚀 17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
🚀 25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
🚀 5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.
மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது..
Teachers Transfer 2022 - New Revised Schedule - Download here
Post a Comment