கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பார்வை 2 - ல் காணும் அரசு செய்தி வெளியீட்டின்படி , மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பார்வை 1 - ன் படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.02.2022 முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ( 100 % ) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து வகையான பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 01.02.2022 முதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment