Title of the document
1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின்படி  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இணை இயக்குநரின் செயல்முறைகள் 
 
 
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( மேல்நிலைக்கல்வி ) செயல்முறைகள் , 
 
1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து . 
 
 அரசாணை எண் 525 ன்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது . அதாவது 01.08.2019 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டதைப் போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . 
 
முதலாவதாக 1 முதல் 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும் அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல் பிரிவும் , ( BIFURCATION ) என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . பார்வை 200 காண் அரசாணை 46 ன்படி ஆசிரியர்கள் பாடவேளைகள் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது . அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் என வாரத்திற்கு 24 பாடவேளைகள் எனவும் , இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள் என வாரத்திற்கு 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது .
 
 அரசாணை 217 ல் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . மேல்நிலைப்பிரிவுகளைப் பொறுத்தவரை 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும் . மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி / மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் 30 மாணவர்களும் , ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும் , 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும் , ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது . குறைந்த பட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் . 
 
பாடவேளைகள் கணக்கிடுதல் : 
 
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓராசியருக்கு , வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை ' வகுப்புகளில் மொழிப்பாடத்தில் வாரத்திற்கு 24 பாடவேளைகள் எனவும் , இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 28 பாடவேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும் . அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் கீழ்நிலை வகுப்புகளுக்கு ( 9,10 ம் வகுப்பு ) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் . கணக்கீடு கூடுதல் தேவை பணியிடங்கள் . 
 
மொழிப்பாடத்தில் 24 பாட வேளைக்கும் , முதன்மைப் பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம் . மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2021 அன்றுள்ள நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் சார்பான பணியாளர் நிர்ணய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post