கனமழையால் அரசு தொடக்கப் பள்ளி இடிந்து விழுந்து தரை மட்டமானது - இன்று விடுமுறை என்பதால் பாதிப்பு இல்லை !
கடலூர் மாவட்டம் வானதிராயபுரம் தொடக்கப் பள்ளி கனமழையால் இடிந்து விழுந்தது. மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் பாதிப்பு இல்லை.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெய்வேலி அருகே பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாததால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள வானதிராயபுரம் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இப்பள்ளிக் கட்டிடம் 1996ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி தெர்மல் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment