Title of the document

SC, ST மாணவிகளை அதிக அளவு பள்ளியில் சேர்த்து, தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு வெகுமதிதொகை அறிவிப்பு !


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் :

பள்ளிக் கல்வி ஆதிதிராவிடர் நலம் -6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் மற்றும் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்த கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை - புதிய கல்வி மாவட்ட வாரியாக வழங்குதல் - 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித்தொகை பெற தகுதியுள்ளோர் விவரம் அனுப்பக் கோருதல்

 இது சார்ந்த அரசாணை மற்றும் அரசு கடித எண்கள் :

 
1. அரசாணை நிலை எண் .228 , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந .7 ) துறை நாள் .13.11.2019
2. அரசுக் கடித எண் . 12279 / ஆதிந -7 2020-1 , நாள் . 27.11.2020 
3. சென்னை -5 , ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண் . இ 3 / 18393 / 2020 , நாள் .24.12.2
 

SC, ST மாணவிகளை அதிக அளவு பள்ளியில் சேர்த்து, தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு வெகுமதிதொகை :

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 9 முதல் 10 ஆம் வகுப்பு முடிய தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமை ஆசியர்களுக்கு பார்வை 2 ல் காணும் அரசு கடிதத்தின்படி இரண்டு பிரிவிலும் வெகுமதி தொகை அளிக்கப்பட்டு வருகிறது . 
 
பார்வை 3 - ல் காணும் ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகளின்படி இத்திட்டத்தினை 2020-2021 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் பொருட்டு தற்போது புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியாக வெகுமதி தொகை பெற தகுதியுள்ள தலைமை ஆசிரியர்களின் சார்ந்த விவரங்களை Excell Format- ல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கல்வி மாவட்டம் வாரியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக ' இ ' பிரிவு மின்னஞ்சல் esec.tndse @ gmail.com மூலம் அனுப்பி விட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை 19.01.2021 க்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post