Title of the document
ADW - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் ( பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் ) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணைய தளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டங்களின்கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 


அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் ( ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் ) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணைய தளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . ஆகவே , மாணாக்கர்களும் தமது கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று , வருமான சான்று , மதிப்பெண் சான்று , சேமிப்புக் கணக்கு புத்தக நகல் , ஆதார் எண்உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களை 07.02.2021 க்குள் கல்வி நிலையத்தில் தவறாது சமர்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் மேற்கண்டவாறு கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை பெற்று 13.02.2021 க்குள் இணைய தளவழி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . நிதியாண்டு முடிய இன்னும் குறுகிய காலமே உள்ளதால் , குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும் மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post