10,12ம் வகுப்பு - சிறந்த மாணவர்களுக்கு காமராசர் விருது அறிவிப்பு
பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!!!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) செயல்முறைகள்:
பள்ளிக்கல்வி - 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு - தமிழ்வழியில் பயின்று
தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்கள் - பெருந்தலைவர் காமராஜர்விருது வழங்குதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை கல்வி மாவட்டம் வாரியாக
அனுப்பக்கோருதல் - சார்ந்து
1. அரசாணை ( நிலை ) எண் 190 , பள்ளிக்கல்வி ( TTI ) துறை நாள் , 18.08.2017 ,
2. சென்னை -6 , தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க , எண் ( 24787 / கே இ 3 / 2020 நாள் 25.09.2020 ,
3. அரசு கடிதம் எண் 108201 அதே / 2020-1 பள்ளிக்கல்வித் துறை , நாள் 18.09.2020 மற்றும் 05.01.2020 ,
10,12ம் வகுப்பு - சிறந்த மாணவர்களுக்கு காமராசர் விருது அறிவிப்பு :
" 2019-2020 - ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு கோரிய தங்களது கருத்துரு தொடர்பாக , அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய விவரங்களுடன் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் பரிந்துரையுடன் கூடிய கடிதத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே , பார்வை ( 4 ) -ல் கண்டுள்ளவாறு ஏற்கனவே அனுப்பப்பட்ட விவரங்களின்படி , 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணவ மாணவியரின் பெயரினையும் , 12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தமிழ்வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த முதல் 15 மாணவ மாணவியரின் பெயரினையும் , மதிப்பெண் வாரியாக இணைப்பில் கண்டுள்ள படிவம் -2 ல் பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் கல்வி மாவட்டம் வாரியாகப் படிவங்களைப் பெற்று வருவாய் மாவட்ட அளவில் இணைப்பில் கண்டுள்ள படிவம் -1 ல் தொகுத்து ( Consolidated ) , மாவட்டக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்ற படிவங்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் தொகுப்பறிக்கை ஆகியவற்றை 05.02.2021 - க்குள் dsejdhanic.in மற்றும் Asee.tndscanic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , அதன் இரண்டு நகல்களை இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
மேலும் இப்பொருள் குறித்து அரசுக்கு உடன் விவரங்களை அனுப்ப வேண்டிய நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் உரிய விவரங்களை மறு நினைவூட்டிற்கு இடமின்றி அனுப்புமாறு அனைத்து முன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . “ இது மிக மிக அவசரம் ”
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment