முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புஉதவித் தொகை திட்டத்தில், தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., தேர்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட்டை, 15ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், தங்கள் மையத்தின் பெயர் பட்டியலை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment