*JACTTO-GEO அறிவிக்கையில் இம்முறையும் குறிப்பிடப்படாத. . . . 'இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியக்' கோரிக்கை. . .!*
ஏய்! அதேன் 'ஊதிய முரண்பாட்டினைக் களைதல்'-னு இருக்கே என பலர் சுய சமாதானம் செய்து கொள்ளலாம். கேள்வி எழுப்புவோரை விரோதிகளாகச் சிலர் சித்தரிக்கலாம். தங்களின் தாராள மனதிற்கு வாழ்த்துகள்.
'காலமுறை ஊதியம் வழங்குதல்' என்ற மூன்று சொல்லோடே முடிக்கப்படாமல் கோரிக்கையின் அவசியம் கருதியே,
*'தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்'* என்று அழுத்தம் திருத்தமாக சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை இடம்பெற்றுள்ளது.
சரி. . ., ஊதிய முரண்பாட்டினைக் களைதல் என்ற கோரிக்கைக்குள் இ.நி.ஆசிரியர் ஊதியப்பிரச்சினை அடங்காதா? என்றால். . . அடங்கவே அடங்காது.
ஊழியர்கள் பெற்று வந்த உரிமையை முழுமையாக மறுப்பதை / பறிப்பதை முரண்பாடு எனக் குறிப்பிடுவது 100% தவறு. முரண்பாட்டிற்குள் அடங்கும் என்பது மதியீனமானதும் கூட.
புரியலையோ. . .!
ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறோம்? 'ஓய்வூதிய முரண்பாட்டைக் களைக!' என்று சொல்வதில்லையே ஏன்? ஏனெனில், இதில் முழுமையான உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
2009-ல் நடைமுறைக்கு வந்த த.அரசின் 7-வது ஊதியக்குழுவால், கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் & உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட இருபிரிவினருக்கு மட்டும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கிணையான ஊதிய உரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளது. இது உரிமைப் பறிப்பு!
அதேநேரம், ஊதியக்குழு நடைமுறையில் பல்வேறு நிலை ஆசிரியர்கள் & அலுவலர்களுக்கு ஒரே பணிநிலையில் கூட ஊதிய முரண்பாடுகள் எழுந்தது. இக்கோரிக்கையும் கடந்த காலங்களில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் தனியாக, சார்ந்த பணியிடங்களைக் குறிப்பிட்டு 'ஊதிய முரண்பாடுகளைக் களைக!' என இடம்பெற்றிருந்தது.
21.01.2019-ல் முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ வழங்கிய கடிதத்தில் இவ்விரு கோரிக்கைகளும் தனித்தனியேதான் இடம்பெற்றிருந்தன.
கடந்த இருமாதகாலமாக மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்த ஜாக்டோ-ஜியோ-வின் அறிவிப்புகளில் இவை இடம்பெறவேயில்லை. இது குறித்து உரியோரின் கவனத்தை ஈர்க்க பகிரவேண்டிய நிலைகள் அனைத்திலுமே தொடர்ந்து பகிர்ந்து & பதிந்து கொண்டேதான் வந்துள்ளேன்.
தற்போதும், 04.02.2021 தேதியிட்ட ஜாக்டோ-ஜியோ அறிவிக்கையிலும் இ.நி.ஆசிரியர் ஊதியப்பிரச்சினை குறித்த அறிவிப்பு இடம்பெறவேயில்லை.
'ஊதிய முரண்பாடும் - முழுமையான உரிமைப் பறிப்பும் வெவ்வேறானவையே!' என்ற எனது தெளிவிற்கு எட்டியபடி. . .
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் நான் சார்ந்திருக்கும் அமைப்பு வலியுறுத்தி இடம்பெறச் செய்த, *இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்!* என்ற எனது கோரிக்கையை ஜாக்டோ-ஜியோ நீக்கிவிட்டதாக / கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டதாகத் தான் நான் கருதுகிறேன்.
அவ்வகையில், இடைநிலை ஆசிரியரான எனது இரு வாழ்வாதாரக் கோரிக்கைகளுள் ஒன்றான பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீட்டுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை நீக்கிய ஜாக்டோ-ஜியோ-விற்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்வதோடே, எமது கோரிக்கையை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
2009-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட த.அரசின் 7-வது ஊதியக்குழுவால் பறிபோன இந்த உரிமையைப் பெற நடந்த போராட்டங்களும் போராளிகளின் தியாகமும் வரலாற்றின் அனைத்து போராட்டங்களிலும் நினைவுகூறப்படும் வேளையில், உரிமையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் இன்று அதனை கோரிக்கையாகக் கூட இடம்பெறச் செய்ய முடியவில்லையே என்பது பெருத்த வேதனையாக இருப்பினும். . . .
இக்கோரிக்கையை ஏன் விட்டுவிட்டார்கள் எனக் கேள்வி எழுப்புவோரை விரோதிகளாகச் சித்தரிக்கும் விசித்திர நபர்களைக் காண்கையில் தான் 'என்னத்த. . . . கண்ணையா' சொல்வதைப் போன்ற அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.
இவ்வயர்ச்சி நீங்கி, கோரிக்கைத் தெளிவுள்ள என்போன்றோரின் வேதனைகள் தீர்ந்தாகவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இப்பதிவை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர் முக்கிய பொறுப்புகளில் வந்தால்தான் நமது கோரிக்கை வெல்லும் என புரிதலின்றிப் புலம்பி பச்ச்ச்ச்ச மண்ணா யாரும் மாறிவிட வேண்டாம். நீங்களே பொறுப்பில் வந்தாலும் அடிப்படை உறுப்பினர்களிடையே கோரிக்கை குறித்த தெளிவும் கேள்வியும் தொடர்ந்து சுடர்விடவில்லையெனில். . .!!!!!
எனவே, *06.02.2021-ல் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீட்டெடுக்கும் கோரிக்கை எதிரொலிக்க முழங்குவோம்!*
_கோரிக்கைத் தெளிவின்றி போராடல் - கொள்கை_
துளியுமின்றி வாழ்வதல் போலக்கெடும்_
_- செல்வ.ரஞ்சித் குமார்_
*படம் இணைப்பு :*
_20.01.2019-ல் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கையுடனும், 04.02.2021-ல் கோரிக்கை இன்றியும் வெளியான ஜாக்டோ-ஜியோவின் அறிவிக்கைகள்_
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment