*இன்றைய செய்திகள்*
*05.02.2021(வெள்ளிக்கிழமை)*
🌹விலகி இருக்க விரும்பினாலும்
சிலரை மட்டும் நம்மால் விட்டுப் பிரியவே முடிவதில்லை காரணம்,
நாம் அவர்கள் மீது வைத்த உண்மையான பாசம்.!
🌹🌹வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த விதமான விமர்சனங்களையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும்.!!
🌹🌹🌹சண்டை பிடித்து 10வது நிமிடத்தில் வந்து இப்போ என்ன உன் பிரச்சனை பேசப் போறியா இல்லையா என்று பாசமாய் அடுத்த சண்டைக்கு தயாராகும்
துணை கிடைக்கப் பெற்றவர்கள் வரம் வாங்கியவர்கள்.!!!
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈🌈11 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் -கல்வித்துறை உத்தரவு
🌈🌈ஐஐடி கேட் 2021 தேர்வு இன்று தொடக்கம்: 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
🌈🌈அரசு உதவிபெறும் கல்லூரி - உதவி பேராசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-02-2021
🌈🌈10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 மாணவர்களுக்கு மட்டுமே ஒரு வகுப்பறையில் அனுமதி.
🌈🌈 டி.இ.ஓ., காலிப்பணியிடம் - கல்வி பணிகள் தேக்கம் - விரைவில் நிரப்ப கோரிக்கை.
🌈🌈 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🌈🌈ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் தற்காலிக பணியிடங்கள் நிரப்ப இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடுb அரசு.
🌈🌈வேலைநிறுத்த காலத்தை முறைப்படுத்தி ஊதியம் தர ஆசிரியர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி
🌈🌈தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌈🌈அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🌈🌈புதிய கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களும், 15 ஆயிரம் பள்ளிகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன.இந்த பள்ளிகளை முன்மாதிரியாக வைத்து, அப்பகுதிகளில் உள்ள மற்ற பள்ளிகளில், படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
🌈🌈பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருச்சியில் பேட்டியளித்தார்.
ஸ்டாலின் முதல்வரனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சாத்தி்யமாகும் என கூறினார்.
🌈🌈பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம்
உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு புதிய பதில்
🌈🌈சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
9-ம் தேதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணியும், ஜோரூட்டின் இங்கிலாந்து அணியும் விளையாட உள்ளது.
🌈🌈சசிகலா வருகை அதிமுகவிற்கு ஒரு சோதனை காலகட்டம்
ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர் கருத்து)
🌈🌈அஇஅதிமுக கொடியை சின்னம்மா பயன்படுத்துவதை சட்டரீதியாக யாரும் தடுக்க முடியாது.
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
🌈🌈அமைச்சர் காமராஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
🌈🌈மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று சென்னை சேப்பாக்கத்தில் புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், காவலர்களுக்கும் நன்றி என்று முதல்வர் கூறியுள்ளார். எத்தனை துறைகள் இருந்தாலும் சுகாதாரத்துறைக்கு தான் தனிச்சிறப்பு என்பது பெருமைக்குரியது என்று முதல்வர் கூறியுள்ளார்.
🌈🌈தமிழகம், புதுவை ஆகிய மாநில தேர்தல் அதிகாரி கொடுக்கும் விவரங்களை அடிப்படையாக கொண்டு விரைவாக தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த விதி விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளார்.
🌈🌈2017 நவம்பரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகதான், உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது
அதிமுகவுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என நீதிமன்றத்தில் மனு செய்து விலகி கொண்டவர் டிடிவி தினகரன்
அமைச்சர் சி.வி.சண்முகம்.
🌈🌈7 பேர் விடுதலையை வைத்து திமுக அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார்
அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் நாங்கள் பேசுகிறோம்
ஸ்டாலின்
🌈🌈தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார்
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் மனு
அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனு அளிப்பு
🌈🌈தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.
ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டு உள்ளது என கூறினார். பிங்க் புக்கில் 11 புதிய லைன் திட்டங்களுக்கு ரூ.11,000 கோடி தேவைப்படும் போது வெறும் ரூ.95 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
🌈🌈சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார்.
சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், சசிகலாவின் வருகை 8ம் தேதிக்கு மாற்றம்
டிடிவி தினகரன்
🌈🌈சசிகலா 8-ம் தேதி வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களுருவில் இருந்து சசிகலா வரும் 8-ம் தேதி சாலை மார்க்கமாக சென்னை திரும்பவுள்ளார். ஏற்கனவே 8-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே பிரசாரம் செய்ய எடப்பாடி திட்டமிட்டிருந்தார். சசிகலா 8-ம் தேதி வரவுள்ளதால் முதல்வரின் பிரச்சார திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
🌈🌈விவசாயிகளின் போராட்டக்களத்தில் திமுக எம்பிக்கள் திருமதி கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோருக்கு விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுப்பு. உள்ளே செல்ல அனுமதியில்லை என்றால் பரவாயில்லை,ஆனால் எங்களை வெளியேற சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை என காவல்துறையிடம் திருச்சி சிவா எம்பி அதிரடி.
🌈🌈சசிகலா வருகிறார் என்றதும் சமாதியை மூடுபவர்கள், நாளை அதிமுக தலைமை கழகம் செல்லும் சேதி கிடைத்தால் தலைமையகத்தையே மூடுவார்களா.?
அமமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கேள்வி.
🌈🌈பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது வரை ஆளுநர் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார்.
இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9ம் தேதி விசாரணைக்காக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
🌈🌈அமைதியான போராட்டங்கள் வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம்
இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்
இந்திய சந்தைகளில் அதிகரிக்கப்படும் தனியார் முதலீட்டை வரவேற்கிறோம்
- அமெரிக்கா
🌈🌈தமிழக சட்டப்பேரவை தேர்தல் - வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகத்தில் சுற்றுப்பயணம்.
🌈🌈நாளை நமதே, இந்த நாளும் நமதே. தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக நீங்கள் தான் இருப்பீர்கள்.
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சருக்கு புகழாரம்.
🌈🌈குறுகிய காலத்தில் 872 அம்மா மினி கிளினிக் துவங்கி அதன் மூலம் 7,34,951 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த முதலமைச்சருக்கு நன்றி
- அமைச்சர் விஜயபாஸ்கர்
🌈🌈B.E., B.Tech., B.Arch., M.Arch., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 8-ம் தேதி தொடங்கும்.
M.E., M.Tech., MBA, MCA, M.Sc., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும்.
-அண்ணா பல்கலைக்கழகம்
🌈🌈அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌈🌈ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது முதல் சீனா அச்சத்தில் உள்ளது.
- இந்திய விமானப் படை தளபதி RKS பதாரியா.
🌈🌈வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை ₹25 அதிகரித்து ₹735 ஆக நிர்ணயம்.
🌈🌈டெல்லி விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், விவசாயிகளின் அமைதியான போராட்டதிற்கே எனது ஆதரவு என கிரேட்டா தன்பெர்க் டிவிட்டரில் பதில்.
🌈🌈இந்திய விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள இந்தியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மனிதநேயம் இருந்தாலே போதும்
- அமெரிக்க நடிகை அமெண்டா செர்னி
🌈🌈அதிமுக அரசுக்கு இந்த சட்டப்பேரவை கூட்டம்தான் கடைசி கூட்டமாக இருக்கும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
🌈🌈தமிழ் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுள் என தமிழக அரசு அறிவிக்ககோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு.
தமிழகம் மதசார்பற்ற மாநிலம்.முருகனை தமிழ் கடவுள் என அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும் என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
🌈🌈சூரப்பாவை விசாரிக்கும் ஆணையத்துக்கு கால நீட்டிப்பு கேட்பது குறித்து 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கால நீட்டிப்பு கேட்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது
🌈🌈புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதிய போக்குவரத்து சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
🌈🌈தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அமைதியுடன் வாழ முடியவில்லை -
மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு.
🌈🌈அதிமுக - அமமுக இணைப்பு பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்
அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்
🌈🌈இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக எம்.பி.க்கள்.
🌈🌈தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
தமிழகம் முழுவதும் சர்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்கள்
மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் காலிபணியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்ப படிவங்களை 11ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள அழைப்பு
விண்ணப்பத்தை வரும் பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
🌈🌈வரும் 8ம் தேதி சென்னை வருகிறார்
சசிகலா; அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டத்தை சசிகலா மேற்கொள்வார் என டிடிவி தினகரன் பேட்டி.
🌈🌈குடியரசு தினத்தன்று வன்முறையில்
ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர்
தீப் சித்து தலைமறைவு; சித்து குறித்து
தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு.
🌈🌈பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை அறிக்கையையடுத்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
🌈🌈அமெரிக்காவில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பால் அமல்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான 3 அரசாணைகளில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் கையெழுத்திட்டாா். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Post a Comment