தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொருந்தாது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்துமா என பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே ஆல்பாஸ் என்ற அறிவிப்பு பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆகையால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment