+2 தனித்தேர்வர்கள் - பொதுத்தேர்வுக்கான அறிவுரைகள் மற்றும் பழைய பாடத்திட்டத்துக்கு இணையான புதிய பாடத்திட்ட பகுதிகள்
நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன் - லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 26.02.2021 பிற்பகல் முதல் 06.03.2021 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Service centres ) நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டும் எனவும் , மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் , சிறப்பு அனுமதித் திட்டத்தில் 08.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய தேதிகளில் ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் சேவை மையங்களுக்கு 26.02.2021 முதல் வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி , பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க ( Service Centres ) அறிவுறுத்துமாறு அனைத்து தன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1. 26.02.2021 முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ கொண்டு ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.2. www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , Click here to access Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்த பின்னர் திரையில் தோன்றும் HSE PRIVATE APPLICATION என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும் சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டுமென்பதற்கான அறிவுரைகள் மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
Post a Comment