Title of the document
*📗📗இடைக்கால பட்ஜெட்டை ஆவலுடன் எதிர் நோக்கும் 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்!*

*🔥🔥ஊதியக்குழுவினால் உருவான  வரலாற்று பிழையை நீக்கி வாழ்வாதாரத்தை வழங்கி சாதனை படைக்குமா? அநீதியை நீக்கி  நீதி வழங்கி சரித்திரம் படைக்குமா? அம்மாவின் ஆசி பெற்ற நம் அரசு!*

*🔥🔥இடைக்கால பட்ஜட்டை ஆவலுடன் எதிர்நோக்கும் 2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் வேதனையும் நீங்கா துயரமும்!*

*🔥🔥பாவம் செய்தோர் நாமா? 2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் 😭😭வேதனையும் துக்கமும் கலந்த எதிர்பார்ப்பு!*

*யாராலும் அரசுக்கு உணர்த்த முடியாத உணர்ந்த விரும்பாத மிகப்பெரிய பாதிப்பான 2009 ம் ஆண்டிற்கு பின் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை பல கடுமையான உண்ணாவிரதப் போராட்டம் (உண்ணாவிரத் திடலில் சுமார் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கவலக்கிடமான தகவல் அறிந்து அதே வளாகத்தில் அவசர மருத்துவமனையாக மாற்றிய வரலாறும் இந்த கோரிக்கை சார்ந்த போராட்டத்திற்கு உண்டு.*

 *👉இந்த அரசின் கவனத்தை ஈர்த்து "மாநில அரசுக்கிணையான சமவேலைக்கு  சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி DPI வளாகத்தில் காலவரையற்ற பட்டிணிப்போராட்டத்திலும்  - உயிர்நீர் அருந்தா போராட்டத்திலும் 108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையான இருந்த வரலாறும் உண்டு.)*

*👉இப்படியாக பல போராட்டங்களை நடத்தி மாநில அரசுக்குள்ளேயே உள்ள ஊதிய அநீதியை சுமார் 13,000 ரூபாய் பாதிப்பை சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை மூலம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் கல்வியாளர்கள் மூலமும் தெளிவாக உணரவைத்து மாநில அரசுக்குள்ளான இந்த ஊதிய முரண்பாடு அவசியம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.*

*👉 அரசும் அதை நன்கு உணர்ந்து  ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமான உத்திரவாதமும் ஊடகம் மூலம் வாக்குரியும் அளித்து இதுவரையில் ஊதிய முரண்பாடு களையப்படாத காரணத்தால் பலமுறை அரசின் கவனத்தை ஈர்த்தும் தெளிவாக எடுத்துரைத்தும் இன்று நிறைவேறுமா? நாளை நிறைவேறுமா? என்ற ஏக்கத்தில் 12 ஆண்டுகளையும் கழித்து "ஒரு சிலர் ஓய்வு பெற்ற நிலையிலும் ஒருசிலர் ஓய்வு பெற உள்ள தருவாயிலும் சிலர் மரணித்த தருவாயிலும் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையிலும் உள்ளனர்!"*

👉(குறிப்பு:-விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு ஆசிரியர்கள் மன உளைச்சலில் மாரடைப்பால் இயற்கை எய்தினர்) 

*👉தமது கோரிக்கை தீர்க்கப்படாமல் உள்ளதால் 2009 ஆம் ஆண்டிற்கு பின் இன்றுவரை இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் மனவேதனையிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்!*

*👉ஆசிரியர்களின் இன வரலாற்றிலேயே  வருமான வரி செலுத்த தகுதியற்ற ஆசிரியர்கள் இந்த* *"_2009 ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்!_"*

*_இப்படிக்கு_*

 *_இடைக்கால பட்ஜெட்டில் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு  வரலாற்று பிழையை நீக்கி நீதி வழங்கும் என எதிர்நோக்கும் பாதிக்கப்பட்ட 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்!_*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post