Title of the document

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு!  

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.அதாவது, வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ”Voter Helpline App” என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புத்தகம், குடிநீர் இணைப்பு பில், தொலைபேசி இணைப்பு பில், ரேசன் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவைகளை ஆதாரமாக கொடுத்து பயன்பெறலாம்.

பிறந்த தேதி ஆவணமாக, பிறந்த நாள் சான்றிதழ் அல்லது 5 ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகள் கொடுக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post