கல்லூரி திறப்பு எப்போது ? அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு என்பது பற்றி 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். பொறியியல்,கலை-அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். மேலும் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு அறிமுக வகுப்புகள் நேற்று தொடங்கியது. தெர்மல் ஸ்கேன் உள்ளிட்ட கொரோனோ தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் செய்த பின்னரே மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அறிமுக வகுப்புகள் நடைபெற்றன.
மேலும் 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணாக்கர்களுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Good
ReplyDeletePost a Comment