Title of the document

பள்ளி வேலை நாள் எத்தனை நாள் ? - அமைச்சர் செங்கோட்டையன்  




‘ ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

  • கொரோனா வைரஸ் உள்ள காலத்தில்கூட துணிந்து, நேற்று (நேற்று முன்தினம்) பள்ளிகள் திறக்கப்பட்டது. 
  • அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் நாளே 92 சதவீத மாணவர்கள் வந்துள்ளனர். 
  • ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் பள்ளிகள் நடைபெறும். 
  • அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். 
  • பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்.  
  • சட்டமன்ற தேர்தல் அட்டவணையை பொறுத்தே பள்ளி வேலை நாளும் பொதுத்தேர்வும் இருக்கும் என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post