Title of the document


JEE MAIN 2021 - EXAM Date And Schedule Published




பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வுத் தேதி, அட்டவணை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும் என்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜேஇஇ மெயின் 2021 தேர்வுத் தேதிகள் குறித்து தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நேற்று (டிச.15) மாலை அறிவித்தது. எனினும் எதிர்பாராத விதமாக நேற்று இரவு, என்டிஏ தளத்தில் இருந்து அனைத்து அறிவிப்புகளும் நீக்கப்பட்டன.




இந்நிலையில் ஜேஇஇ மெயின் 2021 தேர்வுத் தேதி, அட்டவணை உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

இதற்காக மாணவர்கள் jeemain.nta.nic.in. என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=3&LangId=P என்ற இணையத்தைப் பார்க்கலாம்.இத்தகவல்களை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post