Title of the document

 EMIS Attendance App - தன்னார்வ ஆசிரியர்களின் பள்ளி வருகையை பதிவு செய்ய HM மற்றும் BRTE - களுக்கு உத்தரவு - Instructions - Director Proceedings 





 TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கற்போர் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) மைய வருகை விவரம் ( Attendance ) பதிவேற்றம் செய்தல் - சார்பு 

 தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது . இதன்தொடர்ச்சியாக , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரைக் கண்டறியும் பணிகள் மற்றும் மையங்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்து மாவட்ட அளவில் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு , அவர்களின் விவரங்கள் TN - EMIS கைபேசி செயலி வாயிலாக பெறப்பபட்டது . 

இச்செயல்பாடுகளில் தனிக்கவனம் செலுத்தி விரைவாகப் பணிகளை மேற்கொண்ட அனைத்து நிலை அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , ஆசிரியர்பயிற்றுநர்கள் , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் , தன்னார்வலர்கள் என அனைவருக்கும் இவ்வியக்ககத்தின் வாயிலாக பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது மேலும் , மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி , தற்போது , அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் கற்றல் மையங்கள் ( Learners Literacy Centers ) துவங்கப்பட்டு , முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு , அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .இந்நிலையில் , மைய கல்விச் செயல்பாடுகள் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை தொடர்ந்து கண்காணித்திடுவது மிகவும் அவசியமாகிறது . 

இதனைக் கருத்திற்கொண்டு TN - EMIS கைபேசி செயலியில் தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போர் வருகைப் பதிவு விவரங்களை பின்வரும் வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் சார்ந்த மையத்தின் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

* ஒவ்வொரு மையத்தின் தன்னார்வல ஆசிரியர் , அத்தன்னார்வல ஆசிரியருக்கான கற்போர் விவரங்களை , அந்தந்த ஆசிரியர் பயிற்றுநர்களால் Mapping செய்த பின்னரே , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் வருகைப் பதிவு விவரங்களை TN - EMIS கைபேசி செயலியில் மேற்கொள்ள இயலும் .

* எனவே , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்டத்தின் கீழுள்ள , அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் TN - EMIS கைபேசி செயலி சார்ந்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User Name and Password- யை பயன்படுத்தி , தங்களுக்குட்பட்ட மையங்களில் உள்ள ஒவ்வொரு தன்னர்வல ஆசிரியர்களுக்குமான 20 கற்போர் விவரங்களை அந்தந்த ஆசிரியர் பயிற்றுநர்களால் உடனடியாக Mapping செய்யப்பட வேண்டும் . 

* ஒரே மையத்தில் 2 தன்னார்வலர்கள் மற்றும் 40 கற்போர்கள் இருப்பாராயின் , ஒவ்வொரு தன்னார்வல ஆசிரியருக்கும் 20 கற்போர் எனக் கொண்டு விவரங்களை Mapping செய்ய வேண்டும் .

* இதன் பின்னர் , TN - EMIS கைபேசி செயலியின் ( Mobile App ) வாயிலாக அனைத்து கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் வருகைப் பதிவு விவரங்களை அந்தந்த தன்னர்வல ஆசிரியர்களின் வாயிலாகப் அன்றாடம் தவறாது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . 

* TN - EMIS கைபேசி செயலியில் தன்னர்வல ஆசிரியர்கான User Name அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் கைபேசி எண்ணாகும் . Password விவரங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட SPO EMIS CEL வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் . 

* ஒவ்வொரு நாளுக்குரிய தன்னர்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகை விவரங்களை வருகைப் பதிவேட்டில் பதிவிடுவதுடன் , அதே நாளில் அந்தந்த தன்னர்வல ஆசிரியர்களால் Online- ல் பதிவேற்றும் செய்ய வேண்டும் . Off Line வசதி பின்னர் ஏற்படுத்தப்படும் . 

* TN - EMIS கைபேசி செயலியில் உள்ள தன்னர்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப் பதிவு சார்ந்த Template மாதிரி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது . தன்னர்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகையானது Present என்பதை P எனக்குறியிட்டு Default ஆக வழங்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு நாளிலும் , குறிப்பிட்ட தன்னர்வல ஆசிரியர் அல்லது கற்போர் வருகையில் Absent இருந்தால் , அவருக்கு மட்டும் Absent யை வழங்கும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது .

* ஒரு முறை பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை மாற்றவோ , அழிக்கவோ இயலாது . எனவே , வருகைப்பதிவு விவரங்களை மிக கவனமாக பதிவேற்றம் செய்யதிட தன்னார்வல ஆசிரியர்களுக்கு தவறாது அறிவுறுத்த வேண்டும் .

* அனைத்து தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வருகின்ற 09.12.2020 மற்றும் 10.12.2020 க்குள் அனைத்து குறுமைய அளவில் ( CRC level ) TN - EMIS கைபேசி செயலியில் வருகைப் பதிவேற்ற முறை சார்ந்த பிரத்யேகபயிற்சியினை , அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களால் குறைந்த பட்சம் 1 மணிநேரம் வழங்கப்பட வேண்டும் .

* அதன் தொடர்ச்சியாக , வருகின்ற 11.12.2020 முதல் மைய தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகைப் பதிவு விவரங்களை முழுவீச்சில் TN - EMIS கைபேசி செயலியில் அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் . இதற்கான , உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் . கற்போர் கற்றல் மையம் சார்ந்த கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் , தன்னர்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகை விவரங்கள் பதிவுச் செயல்பாடுகளில் எவ்வித சுணக்கத்திற்கோ அல்லது தொய்விற்கோ இடமளிக்காமல் , மையத்தின் அன்றாட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து , மையம் சிறப்பாக தொடர்ந்து செயல்படவைக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மாவட்ட , ஒன்றிய அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , அந்தந்த மையம் சார்ந்த ஆசிரியர்பயிற்றுநர் மற்றும் மைய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோரையே சாரும் . எனவே , முன்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்றி தங்களின் மாவட்டத்திற்குட்பட்ட கற்போம் எழுதுவோம் இயக்கத்திற்கான திட்டச் செயல்பாடுகளை தொடந்து சிறப்பாக மேற்கொண்டிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதன் மூலம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post