Title of the document

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? - தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு  

தமிழ்நாடு கத்தோலிக் கல்வி கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்கள் கழகத்தின் கீழ் 2400 பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு படிக்கும் பாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாரபட்சமானது.

அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசுப்பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன. இதனால் இட ஒதுக்கீட்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும். எனவே அரசு பிறப்பித்த அரசாணையை மாற்றி வெளியிட உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஜனவரி 5 ஆம் தேதிக்குள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post