மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்று முதல் 20ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 20ம் தேதிவரை நடக்கிறது. மருத்துவப் படிபில் இந்த ஆண்டு சேர்க்கை பெற மொத்தம் 972 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து,எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தரவரிசைப் பட்டியலின்படி 151 வரை இடம் பிடித்துள்ள(கட்ஆப் 249 வரை) மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு 152 முதல் 267 வரை உள்ள(190 கட்ஆப் பெற்றவர்கள்) மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். 19ம் தேதி நடக்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 268 முதல் 423வரை (158 கட்ஆப்) பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணிக்கு 527 முதல் 633 வரை உள்ள(133 கட்ஆப்) மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 20ம் தேதி காலை 9மணிக்கு தொடங்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 634 முதல் 785 வரை உள்ள(122 கட்ஆப்) பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
11 மணிக்கு நடக்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 786 முதல் 886 வரை உள்ள (116 கட்ஆப் பெற்றவர்கள்) அழைக்கப்பட்டுள்ளனர். மதியம் 2 மணிக்கு தொடங்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 887 முதல் 951 வரை உள்ள(113 கட்ஆப்) மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதங்களை http://tnhealth.tn.gov.in , http://www.tnmedicalselection.org என்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் 3650, பல் மருத்துவ இடங்கள் 194 உள்ளன. எம்பிபிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு 548+70 வழங்கப்பட்டுள்ளன. பல் மருத்துவத்தில் அகில இந்திய இடங்களுக்கு 29 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கு 227, பல் மருத்துவ படிப்புக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 92.5 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கை வழங்க 2805 எம்பிபிஎஸ் இடங்–்களும், 153 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி மொத்த மாநில ஒதுக்கீட்டு இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புக்கு 3032, பிடிஎஸ் படிப்புக்கு 165 உள்ளன. இது தவிர தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் 15 (சிறுபான்மை 8, சிறுபான்மை அல்லாதவை 7) இவற்றில் 2100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல பிடிஎஸ் கல்லூரிகள் 18 உள்ளன. இவற்றில் 1760 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள்(7.5%) இடங்கள் எம்பிபிஎஸ் 86, பிடிஎஸ் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment