Title of the document

 ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னையில் நவ.8-ல் அறிமுக வகுப்பு

 



  நமது வலைதளத்திற்கு கிடைத்த தகவலின்படி சென்னையில் நவம்பர் எட்டாம் தேதி அன்று மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளியின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளி சார்பில் 2021 ‘நீட்’ தேர்வுக்கு இணையவழியிலான இலவச பயிற்சி வகுப்புகள் நவ.15 முதல் அடுத்த ஆண்டு ஏப்.30 வரை நடைபெற உள்ளன. வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் கூகுள் மீட் வழியாக நடைபெறும். இதற்கான அறிமுக வகுப்பு  இணையவழி வாயிலாக நவ.8-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் https://meet.google.com/phy-xjxy-qua என்ற கூகுள் மீட் லிங்க்கை பயன்படுத்தி பங்கேற்கலாம். முன்னதாக அவர்கள் 8668038347 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post