CBSE - 2021 பொதுத் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..2021 சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்.31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2021) பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த அக்.15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தாமதக் கட்டணத்துடன் செலுத்த நவ.1-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. கரோனா சூழலில் கட்டணத்தைச் செலுத்தக் குறைவான காலமே இருப்பதாகப் பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர். டெல்லி அரசு, முழுமையாகத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், 2021 பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்.31-ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ இணையதளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தக் கடைசித் தேதி அக்.15-ம் தேதி வரை இருந்தது.
தற்போது அக்.31 வரை நீட்டிக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்துடன் கூடிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி நவ.1-ம் தேதி வரை இருந்தது. தற்போது நவ.7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment