Title of the document

 பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று பதிவேட்டில் பராமரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


இது குறித்து திரு.ஸ்ரீகாந்த் கடே என்பாரால் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும் , அதனை பராமரிக்கவும் பார்வை 3 ல் காண் 16.03.2019 நாளிட்ட செயல்முறைகளின் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

தற்போது 2019-2020 ஆம் கல்வியாண்டு முடிவுற்ற நிலையில் , மாணவர்கள் புதிய புத்தகம் பெறுவதற்காக பள்ளி வளாகம் வருகை தருகையில் பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று , வகுப்பு மற்றும் பாடவாரியாகத் தொகுத்து பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் , பயன்படுத்த முடியாத புத்தங்களை பெற்று இருப்பு வைத்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது சார்ந்த பதிவேட்டினை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. Where to kept. Government schools la classrooms se convenient ta illa. Ithula ithayum vaangi Lotti vechitta pasangala nambi school Ku anuppa mudiyuma. Pannu kadikkumo thel kadikkumo nu bayanthuttu irukkavendiyathu thaan

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post